- Advertisement -
Homeகிரிக்கெட்மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரையிறுதி நடக்காமல் போக இப்படி ஒரு காரணம் இருக்கா?... பாகிஸ்தான் வச்ச...

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரையிறுதி நடக்காமல் போக இப்படி ஒரு காரணம் இருக்கா?… பாகிஸ்தான் வச்ச செக்!

-Advertisement-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  13 ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-க்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. நிகழ்ச்சியின் முழு அட்டவணையும் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது. இந்த உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை பத்து இடங்களில் நடக்கிறது. இந்த தொடரில் பத்து அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியும் கடைசி போட்டியும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. நரேந்திர மோடி மைதானம் தவிர பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகியவை அடங்கும். கூடுதலாக புனே, கவுகாத்தி, திருவனந்தபுரம், மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயிற்சி ஆட்டங்கள் நடக்கும்.

இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 11-ஆம் தேதி புதுதில்லியில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பையின் ஒட்டுமொத்த திட்டத்தில், இந்தியா பத்து மைதானங்களில் ஒன்பது இடங்களில் போட்டிகளை விளையாடும். அதே நேரத்தில் பாகிஸ்தானின் போட்டிகள் ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெறும். எவ்வாறாயினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றால், ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க உள்ளது.

-Advertisement-

அட்டவணை வெளியீட்டின்படி, முதல் அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறும். இருப்பினும், இந்த ஏற்பாட்டிற்கு ஒரு நிபந்தனை இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தங்களது உலகக் கோப்பை போட்டிகள் எதையும் மும்பையில் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இதனால், ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், கொல்கத்தாவில் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் என்று அறிவித்துள்ளது. இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று பாகிஸ்தானை எதிர்கொண்டால், மும்பைக்கு பதிலாக கொல்கத்தாவில் போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

-Advertisement-

சற்று முன்