- Advertisement -
Homeகிரிக்கெட்உலகக்கோப்பை போட்டியில் எனக்கே விபூதி அடிக்க பாத்த தோனி. ஆனால் அதை நான் முன்பே கணித்துவிட்டேன்...

உலகக்கோப்பை போட்டியில் எனக்கே விபூதி அடிக்க பாத்த தோனி. ஆனால் அதை நான் முன்பே கணித்துவிட்டேன் – முரளிதரன் பேச்சு

-Advertisement-

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகள் நடக்க உள்ளன. ஆனால் நாக் அவுட் போட்டிகள் எதுவும் சென்னையில் நடக்கப்போவதில்லை. அதற்கு அந்த நேரத்தில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதே காரணம் என சொல்லப்படுகிறது.

இன்று நடைபெற்ற இந்த அட்டவணை வெளியீட்டு நிகழ்ச்சியில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் ஜாம்பவான் பவுலருமான முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் பற்றிய நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதிக் கொண்ட நிலையில் அந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தோனி ஒரு சிறப்பான யுக்தியை கையாண்டார். அந்த சம்பவம் குறித்து முத்தையா முரளிதரன் தற்போது இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி ஜெயவர்த்தனேவின் சிறப்பான சதத்தின் மூலம் 275 ரன்களை சேர்த்தது. இந்திய அணி முதலில் கட்டுகோப்பாக பந்துவீசினாலும், பின்னர் இறுதியில் ரன்களை வாரி வழங்கியது.

-Advertisement-

இந்த வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக விரைவிலேயே அவுட் ஆகினர். அதையடுத்து விராட் கோலியும் கம்பீரும் இணைந்து ஒரு பார்டனர்ஷிப்பை உருவாக்கி அணியை நிலைநிறுத்தினர். இதில் கோலி அவுட் ஆனதும் அடுத்து யுவ்ராஜ் சிங் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தோனி இறங்கினார். அந்த போட்டியில் 67 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் தோனி. அந்த போட்டியில் கம்பீர் 97 ரன்கள் சேர்த்தாலும் அதிரடியாக விளையாடிய தோனிக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தற்போது பேசியுள்ள முரளிதரன், உலகோப்பை போட்டியில் யுவராஜ் சிறப்பான ஒரு பிளேயராக இருந்தார். ஆனாலும் அவர் எனது பந்துகளில் சற்று தடுமாறுவார் என்று எனக்கு தெரியும். அதே சமயம் நானும் சிறப்பாகவே பந்துவீசிக்கொண்டிருந்தேன். ஆனால் விக்கெட் தான் கிடைக்கவில்லை. இந்த நிலையில் களத்தில் நான் பந்து வீசிக்கொண்டிருக்கையில், யுவராஜிற்கு முன்னகவே தோனி இறங்கினார். அவர் இப்படி செய்வார் என்பதை நான் முன்கூட்டியே கணித்துவிட்டேன். ஏன் என்றால் நான் சென்னையில் அவருக்கு நிறைய முறை பந்து வீசி இருக்கிறேன் என்பதால் அவருக்கு எனது பந்துகளில் எப்படி ஆட வேண்டும் என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்