- Advertisement -
Homeகிரிக்கெட்விராட் கோலி ஹெட்லைன்ஸ்ல வேணா வரலாம். ஆனா அரையிறுதி போட்டியின் ரியல் ஹீரோ அவர்தான் -...

விராட் கோலி ஹெட்லைன்ஸ்ல வேணா வரலாம். ஆனா அரையிறுதி போட்டியின் ரியல் ஹீரோ அவர்தான் – நாசர் ஹுசேன் பாராட்டு

-Advertisement-

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதன்படி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணியானது நேற்று தங்களது முதலாவது அரையிறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.

அதோடு இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 397 ரன்கள் குவிக்க பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 327 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியின் போது இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். அதேபோன்று பந்துவீச்சில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

-Advertisement-

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியையும், ஷ்ரேயாஸ் ஐயரையும், முகமது ஷமியையும் அனைவரும் பெரிய அளவில் பாராட்டி வரும் வேளையில் இந்த அரையிறுதி போட்டிக்கான ரியல் ஹீரோ கேப்டன் ரோஹித் சர்மா தான் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசேன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த அரையிறுதி போட்டியை பொறுத்தவரை ஹெட்லைனில் விராட் கோலியின் பெயரும், ஷ்ரேயாஸ் ஐயரின் பெயரும், முகமது ஷமியின் பெயரும் தான் இடம்பெறும்.

ஆனால் என்னை பொருத்தவரை உண்மையிலேயே கூற வேண்டுமெனில் நேற்றைய போட்டியின் உண்மையான ஹீரோ ரோஹித் சர்மா தான். ஏனெனில் அவர் இந்திய அணியின் பேட்டிங் கலாச்சாரத்தை மாற்றியுள்ளார் என்றே நான் கூறுவேன். ட்ரென்ட் போல்ட், டிம் சவுதி போன்ற உலகத்தர பவுலர்களுக்கு எதிராக அதிரடியாக ரன்களை குவித்து மிகச் சிறப்பான அடித்தளத்தை கொடுத்தார். அவர் கொடுத்த இந்த துவக்கமே இந்திய அணியின் வீரர்கள் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல காரணமாக அமைந்தது என்று ரோகித் சர்மாவின் இந்த சிறப்பான இன்னிங்க்ஸை பாராட்டியுள்ளார். அவர் கூறியது போன்றே நேற்றைய போட்டியில் 29 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 47 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்