- Advertisement 3-
Homeவிளையாட்டுவிராட் கோலி கதை முடிந்துவிட்டது.. 3 பேரும் வேறு உயரத்தில் இருக்கிறார்கள்.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

விராட் கோலி கதை முடிந்துவிட்டது.. 3 பேரும் வேறு உயரத்தில் இருக்கிறார்கள்.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

- Advertisement 1-

2014ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியின் விராட் கோலி, ஆஸி. அணியின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோர் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தனர். 4 வீரர்களும் அனைத்து நாடுகளிலும், அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் போட்டிப்போட்டிக் கொண்டு ரன்களை குவித்து வந்தனர்.அதுமட்டுமல்லாமல் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதால், கிரிக்கெட் ரசிகர்கள் 4 பேரையும் ஒப்பிட்டு வந்தனர். ஃபேப் 4 என்று கொண்டாடப்பட்ட 4 பேருக்கும் இடையிலான போட்டியில் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். கேப்டன்சி, பேட்டிங் என்று அனைத்து அணிகளையும் அசால்ட்டாக சம்பவம் செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பேட்டிங் வீழ்ச்சி, விராட் கோலிக்கு பெரியளவில் பாதிப்பை உண்டு பண்னியது.

ஜாலியாக சதம் விளாசி வந்த விராட் கோலியின் பேட்டிங்கில் இருந்து 2.5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சதமும் வரவில்லை. இதன் விளைவால், ஐசிசி டாப் 10 பட்டியலில் இருந்தும் விராட் கோலி வெளியேற்றப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளில் ஒரேயொரு சதம் மட்டுமே விளாசியுள்ள விராட் கோலியின் பேட்டிங் சராசரி 26.5ஆக உள்ளது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ஃபேப் 4 என்று இப்போது சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சதங்களாக விளாசி வருகிறார்கள். ஆனால் விராட் கோலி 4 ஆண்டுகளாக சும்மாதான் பேட்டிங் செய்து வருகிறார். விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் மோசமான பேட்டிங்கையே தொடர்ந்து வருகிறார்கள்.

அதனால் ஃபேப் 4 என்று சொல்வதற்கு பதிலாக ஃபேப் 3 என்று ரசிகர்கள் சொல்லலாம். இல்லையென்றால் ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் என்ற பட்டியலில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு பாபர் அசாமை சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார்.

- Advertisement 2-

அதேபோல் விராட் கோலி இன்னும் சில டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் பார்முக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் டேவிட் வார்னர் நிச்சயம் பார்முக்கு வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டேவிட் வார்னர் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்