- Advertisement 3-
Homeவிளையாட்டு9 பேரும் பவுண்டரி லைன்ல.. அசராமல் சிக்சர் அடித்து அதிரடி.. தனியாளாக தெறிக்கவிட்ட டிராவிஸ் ஹெட்!

9 பேரும் பவுண்டரி லைன்ல.. அசராமல் சிக்சர் அடித்து அதிரடி.. தனியாளாக தெறிக்கவிட்ட டிராவிஸ் ஹெட்!

- Advertisement 1-

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது.

பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பின்னர் 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் கடைசி செஷனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே கனமழை பெய்தது. இதனால் 3ஆம் நாள் ஆட்டத்தில் சுமார் 5 மணி நேரம் வரை ஆட்டம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 9.30 மணியளவில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கிய நிலையில், ஆடுகளம் இங்கிலாந்து பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. அதனை பயன்படுத்தி ஆஸி. பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வீழ்த்தி பெவிலியன் அனுப்பினர் இங்கிலாந்து பௌலர்கள்.

ஆனால் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் தனியாளாக போராட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் டெய்லண்டர்களுக்கு சிங்கிள் ரன்களை கொடுக்காமல் பவுண்டரிகளை விளாசி ரன்கள் குவித்தார். இதையறிந்த பென் ஸ்டோக்ஸ், 9 பீல்டர்களையும் பவுண்டரி எல்லையில் நிற்க வைத்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் டிராவிஸ் ஹெட் பவுண்டரி, சிக்சர் என்று வெளுத்து வாங்கினார்.

- Advertisement 2-

சிறப்பாக ஆடிய அவர் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 4ஆம் நாள் ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

4ஆம் நாள் ஆட்டம் பேட்டிங் செய்யும் அணிக்கே சாதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் செஷனில் மட்டும் 2 விக்கெட்டுகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காமல் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் பட்சத்தில், அவர்களால் இந்தப் போட்டியை எளிதாக வெற்றிபெறலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

சற்று முன்