- Advertisement 3-
Homeவிளையாட்டுமுடிவுக்கு வரும் சீனியர் வீரர்களின் பயணம்.. புதிய பரிமாணத்தில் இந்திய அணி? அஜித் அகார்கர் போட்டுள்ள...

முடிவுக்கு வரும் சீனியர் வீரர்களின் பயணம்.. புதிய பரிமாணத்தில் இந்திய அணி? அஜித் அகார்கர் போட்டுள்ள திட்டம்!

- Advertisement 1-

அண்மையில் பிசிசிஐ தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டார். சுமார் 5 மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்த தேர்வு குழு தலைவர் பதவியை அஜித் அகார்கர் மூலமாக பிசிசிஐ நிரப்பியது. அதுமட்டுமல்லாமல் அஜித் அகார்கருக்கான ஊதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கவும் பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அணி பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் சூழலில், முக்கியமான இடத்திற்கு அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி என்று அத்தனை சீனியர் வீரர்களும் தேர்வு செய்யப்படவில்லை.

கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் சீனியர் வீரர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்கான நேரமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சீனியர் வீரர்கள் ஓரம்கட்டப்பட்டுள்ளது இந்திய அணி மாற்றத்தை நோக்கி வருவது நேரடியாக தெரிய வந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்டு உருவாக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இனி டி20 அணில் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு பதிலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சீனியர் வீரர்களை பயன்படுத்தும் முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளது.

- Advertisement 2-

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எப்படி இங்கிலாந்து அணி இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் தலைமையில் தனித்தனி அணிகளாக பட்டை தீட்டப்பட்டு அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறதோ, அதே பாணியை பிசிசிஐ கையில் எடுத்துள்ளது.

அதேபோல் ரோகித் சர்மா ஓய்வுபெறும் பட்சத்தில் அந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் கொண்டு வரப்பட்டு கேப்டன்சியை ஏற்க வாய்ப்புகள் உள்ளது. அதற்கான முதல் கட்டமாகவே ஜெய்ஸ்வால், ருதுராஜ், கில், முகேஷ் குமார் என்று இளம் வீரர்களை கொண்டு இந்திய டெஸ்ட் அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதில் சீனியர் வீரர்களை எப்படி வெளியேற்றப் போகிறார் என்பதில் தான் அஜித் அகார்கரின் பணிகள் இருக்கிறது. அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

சற்று முன்