- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த பையனுக்கு பயமே இல்ல.. பஞ்சாப் தோக்க காரணமே இந்த ஒரு சம்பவம் தான் -...

அந்த பையனுக்கு பயமே இல்ல.. பஞ்சாப் தோக்க காரணமே இந்த ஒரு சம்பவம் தான் – நிக்கோலஸ் பூரன்

- Advertisement 1-

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த அவர்கள் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்கி அவர்கள் ஃபார்முக்கு திரும்பி உள்ளதால் இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண்பார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

லக்னோ மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 199 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டீ காக் 54 ரன்களும், பூரான் 42 ரன்களும் குருனால் பாண்டியா 43 ரன்களும் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தனர். ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து பேட்ஸ்மேன்கல சேர்க்க தவறிய போதிலும் டீ காக் மற்றும் பூரான் இணைந்து அதிரடியாக ஆதி வேகமாக அவர்கள் ரன் குவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடின இலக்கு என்ற போதிலும் அசராமல் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பேர்ஸ்டோ இணைந்து முதல் விக்கெட்டிற்கு 11.4 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்தனர், விக்கெட்டுகளை பெரிதாக இழக்காமல் வலுவாக அவர்கள் இருந்த போதிலும், மயங்க் யாதவ் 150 கி.மீ வேகத்தில் சராசரியாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து பஞ்சாபின் அதிரடியையும் கட்டுப்படுத்தினார்.

- Advertisement 2-

அவர்களின் முதல் 3 விக்கெட்டையும் மாயங் யாதவ் எடுக்க, பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பும் சிறிதாக மங்கிப் போனது. 20 ஓவர்கள் முடிவில், அவர்கள் 178 ரன்கள் மட்டுமே எடுக்க, லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரின் முதல் வெற்றியையும் பதிவு செய்திருந்தது.

இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன், வெற்றிக்கு பின் பேசுகையில், “அற்புதமான ஆரம்பம். ஹோம் கிரவுண்டில் ரசிகர்கள் முன்னிலையில் வென்றது அருமையாக இருந்தது. நாங்கள் அதிகம் உரையாடி நல்ல ஆரம்பத்தை கொடுப்பது பற்றி பேசி இருந்தோம். நல்ல ஒரு இலக்கையும் இதனால் நிர்ணயித்தோம். ஒரு பக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சிறிதாகவும் இருந்தது.

ஷிகர் தவான் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பாக ஆடினார்கள். நாங்கள் சரியான நேரத்தில் விக்கெட் எடுத்ததால் போட்டியை அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. மயங்க் யாதவ் தான் இந்த இரவின் ஹீரோ. அது மிகவும் அற்புதமான பெர்ஃபார்மன்ஸ். இளம் வீரராக இருந்தும் இந்த உலகத்திற்கே அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை காண்பித்தார்.

அவர் வேகமாக மட்டுமில்லாமல் துல்லியமாகவும் பந்து வீசி இருந்தார். இது போன்ற உள்ளூர் வீரர்களுக்கு ஐபிஎல் ஒரு அற்புதமான பிளாட்ஃபார்ம். ஒவ்வொரு போட்டியும் அவர்களுக்கான வாய்ப்பு. அதன் மூலம் அவர்கள் மேம்பட்டுக் கொண்டே இருந்தால் போதும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்