- Advertisement 3-
Homeவிளையாட்டுஎங்க டீமோட அழகே இதான்.. அந்த பையன் மிரட்டிட்டான்.. உற்சாகத்தில் பேட் கம்மின்ஸ்..

எங்க டீமோட அழகே இதான்.. அந்த பையன் மிரட்டிட்டான்.. உற்சாகத்தில் பேட் கம்மின்ஸ்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிகளுமே ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் வகையில் அமைந்து வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியும் அதிலிருந்து வெளியே வரவில்லை. இரண்டு அணிகளும் முதலில் பேட்டிங் செய்த ஓவர்கள் ரசிகர்களின் பொறுமையை இழக்க வைக்கும் வகையில் இருந்திருந்தாலும் அதன் பின்னர் வந்த இளம் வீரர்கள் போட்டியின் போக்கையே மாற்றி இருந்தனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க்ரம் என பலரும் அவுட்டாகி கிளம்பிய சமயத்தில் இளம் வீரரான நிதிஷ் ரெட்டி மிகச் சிறப்பாக ஆடி 64 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் ஹைதராபாத் அணியின் ரன்னும் 182 ஆக உயர்ந்திருந்தது. இதே போல இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியின் அனுபவ வீரர்களான தவான், பேர்ஸ்டோ, சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா என அனைவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி போக கடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றி பெற காரணமாக இருந்த சஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

கடைசி ஓவரில் 29 ரன்கள் பஞ்சாப் அணியின் வெற்றிக்காக தேவைப்பட்ட போதிலும் இவர்கள் இருவரும் இணைந்து 26 ரன்கள் சேர்த்திருந்தனர். இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கடைசி ஓவரில் போராடி 26 ரன்களை அவர்கள் சேர்த்திருந்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதே போல, பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் அணிகளுக்கு இந்த இரண்டு பேரின் பேட்டிங்கும் மிகப்பெரிய அச்சத்தையும் கொடுத்துள்ளது.

இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இதனால் நாங்கள் 180 ரன் எட்டுவதே சவாலாக இருந்தது. புதுப்பந்தைக் கொண்டு அவர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்த பார்த்தனர். இதனால் புது பந்து ஒரு முக்கிய விஷயமாக இருக்கும் என்பதையும் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

- Advertisement 2-

அவர்களுக்கு புதுப்பந்து எப்படி உதவியதோ, அதே போல் நானும் புவனேஸ்வர் குமாரும் சேர்ந்து ஆரம்பத்தில் பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினோம். எங்கள் அணியின் அழகு என்பது இங்கே நிறைய இடதுகை மற்றும் வலது கை பந்துவீச்சாளர்கள் உள்ளதால் அனைவரையுமே பயன்படுத்தி முயற்சி செய்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி மிக அபாரமாக ஆடி இருந்தார். கடந்த வாரம் அறிமுகமாகி இந்த வாரம் டாப் ஆர்டர் பேட்டிங்கில் அசத்தியிருந்தவர், பந்து வீச்சிலும் மூன்று ஓவர்கள் சிறப்பாக செயல்பட்டார். அவரது ஆட்டத்தின் மூலம் 180-ஐ தொட்டது நம்ப முடியாத ஒரு விஷயமாக உள்ளது” என கம்மின்ஸ் கூறினார்.

சற்று முன்