- Advertisement 3-
Homeவிளையாட்டுஜஸ்ட் மிஸ்.. தோனிக்கு மட்டுமே சொந்தமான சாதனையை நெருங்க தவறிய பேட் கம்மின்ஸ்..

ஜஸ்ட் மிஸ்.. தோனிக்கு மட்டுமே சொந்தமான சாதனையை நெருங்க தவறிய பேட் கம்மின்ஸ்..

- Advertisement 1-

கடந்த 2023-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆடி இருந்த ஆஸ்திரேலியா, சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது. இதேபோல அதே ஆண்டில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் உலக கோப்பை இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த அகமதாபாத் மைதானத்தையும் அமைதியாக்கி இருந்தார் பேட் கம்மின்ஸ்.

அப்படி இரண்டு முறை அவரது தலைமையில் மேஜிக் நடக்க, அது ஐபிஎல் இறுதிப் போட்டியில் நடைபெறாமல் மிக பரிதாபமாகவும் அவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் குவாலிஃபயர் போட்டியில் ஏற்கனவே தோல்வி அடைந்திருந்த ஹைதராபாத் அணி நிச்சயம் இறுதிப்போட்டியில் தக்க பதிலடி கொடுக்கும் என்றுதான் அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் நினைத்தது எதுவுமே ஹைதராபாத் பக்கம் சாதகமாக போகாததால் மிக மோசமாக தோல்வி அடையும் நிலையில் உருவாகியிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோராகவும் மாறி இருந்தது.

தொடர்ந்து தங்களின் பந்துவீச்சு கொஞ்சமாவது நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுக்கும் என எதிர்பார்த்தால் அங்கேயும் அனைத்தும் அவர்கள் நினைத்தது போல நடைபெறவில்லை. மிக சர்வசாதாரணமாக கையாண்டு பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி, 11வது ஓவரிலேயே இலக்கை எட்டியதுடன் மட்டுமில்லாமல் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அபார சாதனையையும் புரிந்துள்ளனர்.

- Advertisement 2-

இந்த தோல்வியால் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் சகவீரர்கள் துவண்டு போயிருந்தாலும் நிச்சயமாக அடுத்த சீசனில் சிறப்பான கம்பேக்கை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அப்படி இருக்கையில் தான் தோனியின் மிக முக்கியமான சாதனை ஒன்றை பெறும் வாய்ப்பை தற்போது தவற விட்டுள்ளார் பேட் கம்மின்ஸ். 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பை என இரண்டையும் வென்ற ஒரே கேப்டனாக தோனி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு வென்ற ஒரு நாள் உலக கோப்பையுடன் சேர்த்து ஐபிஎல் கோப்பையும் தற்போது பேட் கம்மின்ஸ் வென்றிருந்தால், தோனிக்கு அடுத்த கேப்டனாகவும் மாறி இருக்கும் அரிய சாதனையை தற்போது அவர் தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இன்னும் ஒரு சில தினங்களில் டி 20 உலக கோப்பையும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இடங்களில் வைத்து ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்