- Advertisement -
Homeகிரிக்கெட்எல்லாம் ஓகே.. ஆனா அபிஷேக் - ஹெட் சேர்ந்து அப்படி பண்ணத ஏத்துக்கவே மாட்டேன்.. மிரண்ட...

எல்லாம் ஓகே.. ஆனா அபிஷேக் – ஹெட் சேர்ந்து அப்படி பண்ணத ஏத்துக்கவே மாட்டேன்.. மிரண்ட பேட் கம்மின்ஸ்..

-Advertisement-

வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே சமீபத்தில் நடந்த போட்டி முடிந்துள்ள சூழலில் அதற்கான காரணம் தான் பலரையும் அசர வைத்துள்ளது. இந்த சீசன் முழுக்க ஹைதராபாத் அணி அதிரடியை மற்ற அணிகள் நெருங்க கூட முடியாத சூழலில் இரண்டு முறை 250 ரன்களை கடந்து முதல் இரண்டு அதிகபட்ச ஸ்கோரையும் தங்கள் வசமாக்கி இருந்தனர்.

ஆனால் முதல் பேட்டிங்கில் தான் இப்படிப்பட்ட பல சாதனைகளை படைத்திருந்த ஹைதராபாத் அணி இரண்டாவது பேட்டிங்கில் ரன் குவிக்க தடுமாறி தான் வந்தது. இது மிகப்பெரிய அளவில் விமர்சனமாகவும் இருந்த சூழலில் தான் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் தலையெழுத்தையும் மாற்றி எழுதியுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பூரான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகிய இருவரின் உதவியுடன் 165 ரன்களை எட்டி இருந்தது.

இதனால் இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி ஆடும் போது குறைந்தபட்சம் 15 முதல் 17 ஓவர் வரை எடுத்துக் கொள்ளும் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் முதல் பாதியான பத்தாவது ஓவரிலேயே இந்த போட்டி முடிவுக்கு வரும் என நிச்சயம் ஹைதராபாத் ரசிகர்களே கருதி இருக்க மாட்டார்கள்.

முதல் பேட்டிங் போல செகண்ட் பேட்டிங்கிலும் இந்த முறை அதிரடியை காண்பித்த அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் ஆகிய இருவருமே குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்து லக்னோ அணியின் கனவை சுக்கு நூறாக்கி கொண்டிருந்தனர்.

-Advertisement-

அபிஷேக் ஷர்மா 75 ரன்களும், ஹெட் 89 ரன்களும் எடுக்க, 10 ஓவர்களுக்குள் 160-க்கும் மேற்பட்ட ரன்கள் சேஸ் செய்யப்பட்ட முதல் போட்டியாகவும் இது மாறி இருந்தது. இந்த வெற்றியால் மூன்றாவது இடத்திலும் புள்ளி பட்டியலில் முன்னேறி இருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இது பற்றி பேசுகையில், “ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் பாசிட்டிவாக இருப்பதால் ஒரு பந்துவீச்சாளராக அவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதே எனக்கு கடினமான விஷயம் தான். டிராவிஸ் ஹெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக இது போன்ற கடினமாக இடங்களில் தான் ரன் அடித்து வருகிறார்.

அதேபோல் அபிஷேக் ஷர்மாவும் சுழற்பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து என இரண்டிலுமே அபாரமான பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே வெளியே இருக்கும் பவர் பிளே ஓவர்களில் அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது மிக கடினம். இருவரும் ரன்னை உயர்த்திக் கொண்டிருந்த போதே நாங்கள் வெற்றியை உறுதி செய்து விட்டோம். ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இந்த சீசனில் அபாரமாக ஆடி வருகின்றனர். ஆனால் பத்து ஓவர்களுக்குள் இந்த போட்டியை முடித்ததை நிச்சயம் என்னால் கூட நம்ப முடியவில்லை” என கம்மின்ஸ் கூறி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்