- Advertisement 3-
Homeவிளையாட்டுசதமடிச்சும் புஜாராவுக்கு வாய்ப்பில்லையா?.. முதல் தர கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த நாயகனுக்கு வந்த சோதனை..

சதமடிச்சும் புஜாராவுக்கு வாய்ப்பில்லையா?.. முதல் தர கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த நாயகனுக்கு வந்த சோதனை..

- Advertisement 1-

இன்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் இளம் வீரர்கள் அதிகம் தேர்வாகி வருவதால் பல வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது. பலரும் முட்டி மோதிக் கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினாலும் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருந்து வரும் சூழலில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியில் யார் இடம்பிடிப்பார்கள் என்பதை அறிவிக்கவும் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்திருந்த கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவதால், அவர்கள் ஆடும் தகுதியுடன் இருக்கிறார்களா என்பது உறுதியாகாத பட்சத்தில் தான் இந்திய அணிக்கான அறிவிப்பு தாமதமாகி வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே, விராட் கோலி மற்றும் முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களும் இடம்பெறுவது சந்தேகமாகி இருப்பதால் தான் பிசிசிஐ இந்திய அணியை அறிவிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஞ்சி தொடர் ஆரம்பமானது முதல் தனது சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறார் புஜாரா. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நம்பர் 1 வீரராக திகழ்ந்த புஜாரா, சில தொடர்களில் சிறப்பாக ஆடாமல் போனாதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பும் பறிபோனது.

இதனால், அவர் முதல் தர போட்டிகளில் மட்டும் ஆடிக் கொண்டிருக்க, அவரது இடத்தில் இளம் வீரர்கள் அதிகம் பேர் ஆடத் தொடங்கி விட்டனர். ஆனால், அப்படி ஆடி வரும் இளம் வீரர்களும் புஜாரா போன்ற அனுபவமின்மை காரணமாக நெருக்கடி நிறைந்த சூழலில், சிறப்பாக பேட்டிங் செய்து ரன் சேர்க்கவும் தடுமாறுகின்றனர்.

- Advertisement 2-

இதனால், அப்படி ஆடும் இளம் வீரர்களை மாற்றி விட்டு மீண்டும் புஜாரா உள்ளிட்ட வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கோரிக்கை மற்றும் விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் தான், தற்போது நடந்த ரஞ்சி போட்டி ஒன்றில், சதமடித்த புஜாரா, முதல் தர போட்டியில் 62 சதங்களை பதிவு செய்து, சுனில் கவாஸ்கர், சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை அடுத்து நான்காவது இடத்திலும் அந்த வரிசையில் முன்னேறி உள்ளார்.

இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் நிச்சயம் இந்திய அணியில் தேர்வாகியே தீர வேண்டும் என்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கூட தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆரம்பமாகி உள்ள ரஞ்சி போட்டி, பிப்ரவரி 12 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 15 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.

இதனால், ரஞ்சி போட்டியை முடித்து விட்டு இந்திய அணியில் உடனடியாக புஜாரா இணைந்து பயிற்சி மேற்கொண்டு தயாராகி விட முடியுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது. அதன் காரணமாக, புஜாராவுக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றது.

சற்று முன்