- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் வேணும்னு தோணுதுல.. இந்திய அணிக்கு பாடம் புகட்டிய புஜாரா.. எனக்கா எண்ட் கார்டு போட...

நான் வேணும்னு தோணுதுல.. இந்திய அணிக்கு பாடம் புகட்டிய புஜாரா.. எனக்கா எண்ட் கார்டு போட பாத்தீங்க..

- Advertisement 1-

உலக கோப்பைத் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றிருந்தது. இதனையடுத்து தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அங்கே ஒரு நாள் தொடர், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடரிலும் ஆடி இருந்தது. இதில் ஒரு நாள் தொடரை வென்றிருந்த இந்திய அணி, டி20 மற்றும் டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது கடும் விமர்சனத்துக்கும் அவர்கள் உள்ளாகினர்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங்கை பலதரப்பிலான கிரிக்கெட் பிரபலங்கள் விமர்சித்தது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியை பழிக்குப் பழிவாங்கிய இந்திய அணி, ஒன்றரை நாளிலேயே டெஸ்ட் போட்டி முடியவும் காரணமாக இருந்து தொடரையும் சமன் செய்திருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்த இந்திய அணி, கடைசி ஆறு விக்கெட்களை ஒரு ரன் கூட சேர்க்காமல் இழந்திருந்தது. இதே போல இரண்டாவது இன்னிங்சிலும் 79 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டிப் பிடிப்பதற்கு முன்பாக மூன்று விக்கெட்டுகளை இழந்த பின்னர் தான் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் பௌலிங் அதிரடியாக இருந்தாலும் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. மேலும் டி 20 போட்டியில் அதிரடியாக ஆடும் இளம் வீரர்களை டெஸ்ட் போட்டியிலும் ஆட வைத்து வருவதால் அவர்கள் நிதானம் தவறி விக்கெட்டுகளை பறிகொடுப்பது இந்திய அணியின் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நிச்சியம் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும் என பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வந்தனர்.

- Advertisement 2-

அப்படி இருக்கையில் தன்னை இந்திய அணி எடுக்காமல் போனது மிகப்பெரிய தவறு என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா. ரஞ்சி தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடி வருகிறார் புஜாரா. ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் பேட்டிங் செய்து வரும் சவுராஷ்டிரா அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 406 ரன்களை இரண்டாம் நாள் முடிவில் எடுத்துள்ளது.

இதில் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரர் புஜாரா 157 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். ஒரு சில தொடர்களில் புஜாரா சிறப்பாக ஆடாததால் அவரை தொடர்ந்து இந்திய அணியில் இருந்து வெளியே வைத்திருந்த பிசிசிஐ தற்போது நிச்சயம் அவரை மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்