- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுதான்டா ஐபிஎல்.. போட்டியின் விதியை மாற்றி எழுதிய வீரர்.. ஐந்தே ஓவரில் ஆஃப் ஆன குஜராத்..

இதுதான்டா ஐபிஎல்.. போட்டியின் விதியை மாற்றி எழுதிய வீரர்.. ஐந்தே ஓவரில் ஆஃப் ஆன குஜராத்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் சீசனின் 17 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்தது. முன்னதாக ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் குஜராத் அணி மூன்று போட்டிகள் ஆடி இரண்டில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்திலும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு ஏழாவது இடத்தில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேவிட் மில்லருக்கு பதிலாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கேன் வில்லியம்சன் இடம்பிடித்து இருந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய இவர், 22 பந்துகளில் நான்கு ஃபோர்களுடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

முதல் பத்து ஓவர்களில் குஜராத் அணி சற்று நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து இருந்தாலும் கடைசி கட்டத்தில் அந்த அணியின் கேப்டன் கில் தாறுமாறாக ரன்களை எடுத்திருந்தார். தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை நின்றாலும் சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டிருந்தார்.

48 பந்துகளில் ஆறு ஃபோர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இவருடன் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ராகுல் தெவாட்டியாவும் எட்டு பந்துகளில் 23 ரன்கள் அடித்ததால் 199 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரையும் அவர்கள் எட்டி இருந்தனர். இதே போல், குஜராத் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் நல்லதொரு பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன், இந்த முறையும் 19 பந்துகளில் 6 ஃபோர்களுடன் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement 2-

இதனை தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கி தங்களின் பேட்டிங் தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன், 2 வது ஓவரின் முதல் பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியாக ஆடினாலும் நீண்ட நேரம் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. 13 பந்துகளில் 22 ரன் எடுத்து நூர் அகமது பந்தில் அவுட்டாக, இவரை போல அதிரடி ஆட்டம் ஆடிய பிரப்சிம்ரன் சிங்கும் 35 ரன்கள் எடுத்த போது அதே நூர் பந்தில் அவுட்டானார்.

பஞ்சாப் அணி இதனால் தோற்று விடும் என்ற சூழலில், 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 10 ஓவர்களில் 117 ரன்கள் தேவைப்பட, 6 வது வீரராக உள்ளே வந்த சஷாங் சிங், போட்டியின் விதியை மாற்றி எழுதினார். 7 வது விக்கெட்டுக்கு இணைந்த அவருடன் அசுதோஷ் ஷர்மா இணைந்து பார்ட்னர்ஷிப் போட, பஞ்சாப் தோற்று விடும் என்ற போட்டியில் வெற்றி ரூட்டை அவர்கள் எழுதினர்.

இதனால், கடைசி 3 ஓவர்கள் த்ரில்லாக போக, ஒரு பந்தை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்ட வைத்த ஷசாங் சிங், 29 பந்துகளில் 6 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை எடுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்திலும் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளார்.

சற்று முன்