- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி பத்தி என்கிட்ட கேக்காதீங்க.. ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு டிராவிட் சொன்ன பதில்..

கோலி பத்தி என்கிட்ட கேக்காதீங்க.. ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு டிராவிட் சொன்ன பதில்..

- Advertisement 1-

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள சூழலில், தற்போது ரசிகர்கள் அனைவரது பார்வையும் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் பிசிசிஐ அறிவிக்கப்போகும் அணி பற்றி தான் உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இடம் பெறுவாரா மாட்டாரா என்பதை அறிந்து கொள்வதற்காக தான். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விராட் கோலி கடைசி நேரத்தில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கு முன்னரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் விராட் கோலி இதே போன்று தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருந்தார். அதன் காரணம் பற்றிய முழு விவரம் என்ன என்பது தெரிய வராமல் இருந்த சூழலில், விராட் கோலி தாயார் உடல்நிலை சரியில்லை என்பதற்காக தான் அவர் தொடர்ந்து போட்டிகளில் இருந்து விலகி வருகிறார் என்ற ஒரு தகவலும் பரவி வந்தது. ஆனால் அதில் எந்தவித உண்மையும் இல்லை என விராட் கோலியின் சகோதரர் மறுத்து அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.

இதனிடையே விராட் கோலி கிரிக்கெட் ஆடாமல் இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றி அவரது நெருங்கிய நண்பரும், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் தெரிவிக்கையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினருக்கு இரண்டாவதாக குழந்தை பிறக்கப் போவதாகவும் அதனால் தான் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டு வருவதாகவும் உண்மையை உடைத்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியடைந்துள்ள சூழலில் கிரிக்கெட்டை விட குடும்பத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களையும் கோலிக்கு ஆதரவாக தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement 2-

ஆனால் அதே வேளையில் இரண்டு டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் போன விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியில் ஆடுவாரா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இதனிடையே இது பற்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “அது பற்றி அணியின் தேர்வாளர்களிடம் கேட்பது தான் சரியாக இருக்கும். மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இன்னும் அறிவிக்கப்படாததால் தேர்வாளர்கள் தான் இதற்கு பதில் சொல்ல சரியானவர்கள். அடுத்த சில தினங்களில் மூன்று போட்டிகளுக்கான அணி பற்றி அறிவிப்பு வரும் என கருதுகிறேன். கோலியுடன் தொடர்பில் இருந்து அவர் ஆடுவாரா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்