- Advertisement 3-
Homeவிளையாட்டுமுடிவுக்கு வந்த பயிற்சியாளர் பதவி ஒப்பந்தம்.. ராகுல் டிராவிட் யோசிப்பது என்ன? அவரே சொன்ன பதில்.....

முடிவுக்கு வந்த பயிற்சியாளர் பதவி ஒப்பந்தம்.. ராகுல் டிராவிட் யோசிப்பது என்ன? அவரே சொன்ன பதில்.. கடைசியில் நடைபெற்ற டிவிஸ்ட்…!

- Advertisement 1-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகினர்.

பின்னர் வந்த ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் களத்திலேயே கதறி அழுதனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட் கூறும போது, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு வெறும் ஒரு காரணம் மட்டுமல்ல. முதல் பேட்டிங்கின் போது நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதும், அதன்பின் பவுலிங்கில் சொதப்பினோம்.

அதுமட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளது. இதனால் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஐசிசி தொடரை நாக் அவுட் சுற்றுக்கு வந்து இழந்துள்ளது. இந்த மூன்றிலும் நானும் காரணமாக இருந்துள்ளேன். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் தொடர்வேனா என்பது தெரியவில்லை.

- Advertisement 2-

இதுவரை பயிற்சியாளர் பதவியை தொடர்வது பற்றி சிந்திக்கவில்லை. எங்களின் கவனம் முழுவதும் உலகக்கோப்பை தொடரில் மட்டுமே இருந்தது. தற்போது வரை உலகக்கோப்பை தொடருக்கு பின் என்ன திட்டம் என்பது தெரியவில்லை. நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது அதுகுறித்து சிந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்று கொண்டார். அதன்பின் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி இணைந்து பணியாற்றி வருகிறது. உலகக்கோப்பை தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்