- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி போங்காட்டம் ஆடுவாரு. அதை நானே பார்த்திருக்கிறேன். கோலி 2007லேயே இதை முடிவு செய்துவிட்டார்...

தோனி போங்காட்டம் ஆடுவாரு. அதை நானே பார்த்திருக்கிறேன். கோலி 2007லேயே இதை முடிவு செய்துவிட்டார் – சுரேஷ் ரெய்னா பேச்சு

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ரெய்னா ஒரு சிறப்பான வீரராகவே வளம் வந்தார். அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது ஆட்டம் அபாரமாக இருந்து. தோனிக்கு அடுத்த இடத்தை அவருக்கு ரசிகர்கள் கொடுத்து, சின்ன தல என்று அவர் அன்பாக அழைத்தனர். இந்த நிலையில் ரெய்னா சமீபத்தில் தன்னுடைய பல அனுபவங்கள் குறித்து பகிர்ந்துளளர்.

அதில் தான் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் பற்றி பேசுகையில் “நான் எதிர்கொண்ட கடினமாக பவுலர்கள் என்றால் முரளிதரன் மற்றும் மலிங்கா என்று நினைக்கிறேன், ஆனால் வலைப் பயிற்சியின் போது கடினமான பவுலர் எம்எஸ் தோனி தான். அவர் உங்களை வலையில் வெளியேற்றினால், நீங்கள் அவருடன் ஒன்றரை மாதங்கள் உட்கார முடியாது, ஏனென்றால் அவர் உங்களை எப்படி அவுட் ஆக்கினார் என்பதை சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்.

- Advertisements -

அவர் ஆஃப் ஸ்பின், மீடியம் பேஸ், லெக் ஸ்பின் என அனைத்தை வகையிலும் பந்து வீசுவார். வலைகளில், அவர் தனது முன் கால் நோ-பால்களை நியாயப்படுத்துவார்.” என்று ரெய்னா தனது பேச்சில் தோனியை பற்றி கலகலப்பாக பேசியுள்ளார்.

மேலும் இந்திய நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் கோலியுடனான அனுபவம் குறித்து அவர் பேசுகையில் “விராட் தனது உடற்தகுதி மாற்றம் தொடங்கியதில் இருந்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். 2007/08 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்ற தனது அபிலாஷைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவரது தோற்றம், நடை, பஞ்சாபி பாடல்களைக் கேட்கும் பழக்கம் போன்றவற்றை யுவியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.”எனக் கூறியுள்ளார்.

- Advertisement-

மேலும் “மற்றொரு விஷயம் என்னவென்றால், விராட்டுக்கு அவரது பெற்றோரின் ஆசீர்வாதம் இருந்தது. எந்த இளைஞரிடமும் அவர் கொண்டிருந்த பணி நெறியை நான் பார்த்ததில்லை. அவருடைய பயிற்சி முறையும் தன்னம்பிக்கையும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அடுத்த நாள் ஆட்டத்தில் சதம் அடிக்க வேண்டுமென்று முடிவு செய்து விளையாடுவார். அவர் இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற அணிகளுக்கு எதிராக அடிக்கடி சதம் அடிப்பார்.

பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு மிகுந்த நம்பிக்கையும் அணுகுமுறையும் இருந்தது. அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவரது பயிற்சியாளர், தாய், சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் அவரது போராட்டத்தை அறிவார்கள். ”என்று அவர் மேலும் கூறினார்.

சற்று முன்