- Advertisement 3-
Homeவிளையாட்டுலீக் சுற்று முடியும் நேரத்தில் வேலையை காட்டிய ராஜஸ்தான் அணி.. அதகளம் செய்த சுட்டி குழந்தை..

லீக் சுற்று முடியும் நேரத்தில் வேலையை காட்டிய ராஜஸ்தான் அணி.. அதகளம் செய்த சுட்டி குழந்தை..

- Advertisement 1-

இனிமேல் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் போட்டியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 2 போட்டிகளும் மட்டும் தான் விறுவிறுப்பு நிறைந்த வகையில் இருக்கும் என்றும் தெரிகிறது. இந்த 3 போட்டிகள் தான் பிளே ஆப் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் வகையில் இருப்பதால், மற்ற போட்டிகள் பெயருக்கு புள்ளிப் பட்டியலில் இடம் யாருக்கு என்பதை முடிவு எடுக்கும் வகையிலும் அமைந்திருக்கும் என தெரிகிறது.

இதற்கிடையே தான் ஏற்கனேவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மறுபுறம் லீக் சுற்றுடன் வெளியேறும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி இருந்தது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த ராஜஸ்தான் அணி பல விஷயங்களில் சொதப்பி வருவதால் அவர்களால் வெற்றி பெறவும் முடியவில்லை.

அப்படி இருக்கையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் முதலில் பேட்டிங் செய்த போது அவை பிரதிபலித்தது. ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், கோஹ்லர் 18 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 18 ரன்களிலும் அவுட்டாக ரியான் பராக் மற்றும் அஸ்வின் இணைந்து ஓரளவுக்கு அணியை மீட்டெடுக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 144 ரன்களை 9 விக்கெட்கள் இழந்து சேர்த்திருந்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்கள் சேர்த்து இந்த சீசனில் 500 ரன்களையும் கடந்திருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண், ஹர்ஷல் படேல் மற்றும் ராகுல் சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து இலக்கை நோக்கி அடிய பஞ்சாப் அணியும் 48 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் கையும் அதிகம் ஓங்கி இருந்த நிலையில் தான் சாம் கரண் மற்றும் ஜிதேஷ் சர்மா இணைந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர்.

- Advertisement 2-

இதற்கிடையே கடைசி ஆறு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜித்தேஷ் சர்மா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட் பஞ்சாப் அணியை பெரிய அளவில் பாதிக்காமல் போக, கேப்டன் சாம் கரண் நிலைத்து நின்று ஆடி அரை சதத்தையும் கடக்க, பஞ்சாப் அணி 19 வது ஓவரில் வெற்றி இலக்கையும் எட்டிப் பிடித்திருந்தது.

41 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்களுடன் 61 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 வது தோல்வியை சந்தித்துள்ளது. பிளே ஆப் சுற்று நெருங்குவதால் ராஜஸ்தான் அணி நிச்சயம் நல்ல கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

சற்று முன்