- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின் விளையாடாதது ஏன்? எங்கள் அணியில் திறமைக்கா பஞ்சம்?. ஆனாலும் புள்ளிப் பட்டியலின் எங்களின் நிலை?...

அஸ்வின் விளையாடாதது ஏன்? எங்கள் அணியில் திறமைக்கா பஞ்சம்?. ஆனாலும் புள்ளிப் பட்டியலின் எங்களின் நிலை? – சஞ்சுவின் புலம்பல்

- Advertisement 1-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் ஆரம்பத்தில் வரிசையாக போட்டிகளை வென்று முதல் நான்கு இடங்களுக்குள் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து சில போட்டிகளை தோற்று பின் தங்கிய நிலையில் இப்போது 14 போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 14 புள்ளிகளோடு 5 ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன்ரேட்டும் பாஸிட்டிவில் உள்ளது. ஆனால் அவர்கள் ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் இனிமேல் மற்ற அணிகளின் தோல்விகள் மற்றும் வெற்றிகளை பொறுத்தும் அவர்களின் ரன்ரேட்டை பொறுத்துமே வாய்ப்புகள் உருவாகும். இனி நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 186 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாம் கர்ரண் 49 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 44 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். பின்னர் நடுவரிசை பேட்ஸ்மேனான ஷிம்ரான் ஹெட்மெய்ர் அதிரடியாக விளையாடி, 46 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இதன் மூலம் 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 189 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது. இன்னும் சில ஓவர்கள் முன்பே இலக்கை எட்டியிருந்தால் ரன்ரேட் அதிகரித்திருக்கும்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் “ஹெட்மெய்ர் சிறப்பாக விளையாடிய போது நாங்கள் ஒரு ஓவர் முன்பே வெற்றி பெறுவோம் என நினைத்தேன். நாங்கள் தரமான வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கிறோம். ஆனால் புள்ளிப் பட்டியலில் நாங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகதான் உள்ளது.

- Advertisement 2-

இதையும் படிக்கலாமே: ப்ளேயிங் லெவனில் மாற்றம் செய்வாரா தோனி? யாரை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? முழு விவரம்

ஒவ்வொரு போட்டியின் போதும் நான் ஜெய்ஸ்வாலை பற்றி பேசுகிறேன். அவர் விளையாடுவது 100 போட்டிகள் விளையாண்ட வீரரைப் போல முதிர்ச்சியாக உள்ளது. கடந்த சில போட்டிகளாக நாங்கள் அழுத்தத்தை உணர்ந்தோம்” எனக் கூறியுள்ளார். அதே சமயம் டாஸ் வென்ற பிறகு சஞ்சு பேசியபோது, அஸ்வின் முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை என்பதையும் தெரிவித்திருந்தார்

சற்று முன்