- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல் விளையாடுறது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல… சஞ்சு சாம்சனை புலம்ப விட்ட சந்தீப் ஷர்மா!

ஐபிஎல் விளையாடுறது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல… சஞ்சு சாம்சனை புலம்ப விட்ட சந்தீப் ஷர்மா!

-Advertisement-

ஐபிஎல் 16 ஆவது சீசனின் 52 ஆவது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி, 59 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். மற்றொரு வீரரான சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். இந்த அதிரடியான இன்னிங்ஸ்களால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அதிரடியாக விளையாடி, ரன்களைக் குவித்து இலக்கை நோக்கி சென்றது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்ததால், ராஜஸ்தான் கை ஓங்கி இருந்தது. ஒரு கட்டத்தில் ரன் ரேட் அதிகமாகிக் கொண்டே சென்ற நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் க்ளன் பிலிப்ஸ் சர்பரைஸாக ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி நம்பிக்கையை ஊட்டினார். ஆனால் அதே ஓவரில் அவர் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 7 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற பொழுது, சந்தீப் சர்மாவின் கடைசி பந்து நோபால் உதவியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் சொதப்பல்களும் முக்கியக் காரணியாக அமைந்தது. அதில் மிகவும் மோசமாக அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனே எளிதான ஒரு ரன் அவுட்டை கோட்டைவிட்டது சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்ந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் “ஐபிஎல் தொடரை ஸ்பெஷல் ஆனதாக ஆக்குவதே இதுபோன்ற போட்டிகள். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை உங்களுக்கு வெற்றி சொந்தமில்லை. சந்தீப் ஷர்மாவை நான் பெரியளவில் நம்பினேன். அவர்தான் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியை வென்று கொடுத்தார். சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் அவர்கள் அறிவுப்பூர்வமாக விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவ்வளவு எளிதானது இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். எஞ்சிய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முதலிடத்தைப் பிடிப்போம்” எனக் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்