- Advertisement 3-
Homeவிளையாட்டுகொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. வந்த வேகத்தில் பைபை சொன்ன ஆர்சிபி.. சைலண்டா சம்பவம் செஞ்ச...

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. வந்த வேகத்தில் பைபை சொன்ன ஆர்சிபி.. சைலண்டா சம்பவம் செஞ்ச ராஜஸ்தான்..

- Advertisement 1-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளிடையே நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டி முழுக்க முழுக்க ஒன்சைடாக இருந்தது போல் தோன்றியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடைசி ஓவரில் ஆல் அவுட்டாகி, 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, 14 வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்ததுடன் நான்காவது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டது. இந்த போட்டி முழுக்க கொல்கத்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் ஹைதராபாத் அணியால் அவர்களை எதிர்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாமல் போனது.

ஆனால் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நடுவே நடந்த நடைபெற்ற எலிமினேட்டர் போட்டி மிக விறுவிறுப்பாக தான் ஏறக்குறைய கடைசி வரை சென்று கொண்டிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் படிதர் 34 ரன்களும், கோலி 33 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் மட்டுமே ஆர்சிபி அணி எடுத்திருந்தது. போல்ட் மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி மொத்தம் 8 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர்.

- Advertisement 2-

இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக ஆடி வந்தாலும் அடுத்தடுத்து சில முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 10 ஓவர்களில் 87 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து துருவ் ஜூரேலும் எட்டு ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக போட்டி இரு அணிகளின் பக்கமும் சாய்ந்திருந்தது.

ஆனால் இதன் பின்னர் கைகோர்த்த ஹெட்மயர் மற்றும் ரியான் பராக் ஆகியோர் தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளையும் அடித்திருந்தனர். இதனால் மெல்ல மெல்ல தங்கள் மீதான நெருக்கடியை குறைத்து ராஜஸ்தான் அணி தங்களின் வெற்றி வாய்ப்பையும் அதிகப்படுத்தினர். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட 18 வது ஒவரை வீசிய சிராஜ், போட்டியை மீண்டும் ஆர்சிபி பக்கம் மாற்றி இருந்தார்.

இவர் வீசிய ஒரே ஓவரில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் அவுட்டாக, அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. ஆனாலும், 19 வது ஓவரில் போவெல் அதிரடி காட்ட, ராஜஸ்தானின் வெற்றியும் அதே ஓவரின் இறுதி பந்தில் உறுதியானது. பிளே ஆப் சுற்றுக்கே பில்டப்புடன் வந்த ஆர்சிபி அணி, எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மே 24 ஆம் தேதியன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, கொல்கத்தா அணியை மார்ச் 26 ஆம் தேதியன்று நடைபெறும் இறுதி போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்