- Advertisement 3-
Homeவிளையாட்டு6 பந்துக்கு 10 வேணும்.. ராஜஸ்தானுக்கு பயத்தை காட்டிய பஞ்சாப்... கடைசி ஓவரில் சீட் நுனிக்கே...

6 பந்துக்கு 10 வேணும்.. ராஜஸ்தானுக்கு பயத்தை காட்டிய பஞ்சாப்… கடைசி ஓவரில் சீட் நுனிக்கே வந்த ரசிகர்கள்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அபாரமாக வெற்றி கண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐந்தாவது போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த போதிலும் நூலிழையில் அதனை தவற விட்டிருந்தது. இந்த தோல்வியினால் துவண்டு போகாமல் தொடர்ந்து அடுத்த போட்டியிலேயே சிறப்பாக ஆடத் தொடங்கிய ராஜஸ்தான், பஞ்சாப் அணியை மிகச் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தி இருந்தது.

பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் இந்த போட்டியில் ஆடாத நிலையில் அவருக்கு பதிலாக சாம் குர்ரான் அந்த அணியை வழிநடத்தி இருந்தார். அதே போல ராஜஸ்தான் அணியிலும் ஜோஸ் பட்லர் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக தனுஷ் கோட்டியான் மற்றும் ரோமன் போவல் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ், இருபது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதால் பஞ்சாப் அணியில் அசுதோஷ் ஷர்மாவை தவிர எந்த வீரரும் 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. அவரும் கடைசி கட்டத்தில் 16 பந்துகளில் மூன்று சிக்சர்கள் மற்றும் ஒரு ஃபோர்களுடன் 31 ரன்களை எடுத்திருந்தால், பஞ்சாப் அணி 140 ரன்களை கடக்கவும் வழி செய்திருந்தது.

தொடர்ந்து அடிய ராஜஸ்தான் மிக நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. தனுஷ் கோட்டியான் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க, 9 வது ஓவரில் 56 ரன்கள் மட்டுமே அவர்கள் சேர்த்திருந்தனர். மேலும் தனுஷ் 31 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார். ஜெய்ஸ்வால் 38 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்து சாம்சனும் பெரிதாக ரன் குவிக்க தடுமாறினர். 17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்ததால் கடைசி மூன்று ஓவர்களில் அவர்களின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

- Advertisement 2-

இதனையடுத்து, ஹர்ஷல் படேல் வீசிய 18 வது ஓவரில் துருவ் ஜூரேல் அவுட்டானாலும், ஹெட்மயர் உதவியுடன் அந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, 19 வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டு இரண்டு விக்கெட்டுகளும் செல்ல, மீதம் 3 விக்கெட்டுகள் ராஜஸ்தானுக்கு இருந்த நிலையில், கடைசி ஓவரில் 10 ரன்கள் வேண்டுமென்ற நிலையும் உருவானது.

இந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, முதல் இரண்டு பந்துகள் டாட் ஆனது. 3 வது பந்தை ஹெட்மயர் சிக்சருக்கு விரட்ட, அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஐந்தாவது பந்தை மீண்டும் சிக்சருக்கு விரட்டிய ஹெட்மயர், ராஜஸ்தான் வெற்றியையும் உறுதி செய்தார். இந்த தொடரில் 5 வது வெற்றியை ருசித்த ராஜஸ்தான், முதலிடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.

சற்று முன்