- Advertisement 3-
Homeவிளையாட்டுவயசு ஆகுது.. உடம்புல காயம் வேற.. இதெல்லாம் தாண்டி நான் பந்து வீச காரணம்.. எமோஷனல்...

வயசு ஆகுது.. உடம்புல காயம் வேற.. இதெல்லாம் தாண்டி நான் பந்து வீச காரணம்.. எமோஷனல் ஆன அஸ்வின்..

- Advertisement 1-

கிரிக்கெட்டும் வாழ்க்கையும் ஏறக்குறைய ஒரே போல தான் இருக்கும். இங்கே எதிர்பாராத நேரத்தில் ஏற்றங்களும், இறக்கங்களும் நம்மை மன அழுத்தத்திற்கும் ஆளாக்குவதுடன் மட்டுமில்லாமல் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வைக்கும். அப்படி இருக்கையில் அதிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுக்கும் வீரர்களும் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின்.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் அஸ்வின், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இவர் இந்த சீசனின் முதல் பாதி போட்டிகளில் சிறப்பாக செயல்படவே இல்லை. விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் அவதிப்பட்ட அஸ்வின், ரன்களையும் அதிகம் வாரி வழங்கி இருந்தார். இதனால், அவருக்கு பதிலாக வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்தது.

ஆனால் இரண்டாவது பாதியில் அப்படியே அனைத்தும் தலைகீழாக மாறிப்போனது. தொடர்ந்து கடின உழைப்பு போட்டு மீண்டும் டி20 போட்டிகளுக்காக தயாராகி வந்த அஸ்வின், ராஜஸ்தான் தோல்வியடைந்தாலும் பல போட்டிகளில் விக்கெட்டுகளை எடுத்து எதிரணியினருக்கு நெருக்கடியையும் உருவாக்கி இருந்தார்.

சமீபத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த எலிமினேட்டர் போட்டியிலும் கூட நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இதனால் ஆர்சிபியும் ரன் குவிக்க முடியாமல் தடுமாற, ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement 2-

இந்த வெற்றியால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். இதற்கு பின் அவர் பேசுகையில், “நாங்கள் கடந்த சில போட்டிகளில் நன்றாக ஆடவே இல்லை. பட்லர் டி20 உலக கோப்பைக்காக வெளியேற ஹெட்மயரும் காயமடைந்திருந்தார். ஆனால் தற்போது பெற்ற வெற்றி மிக முக்கியமானது. சேஸ் செய்யும் போது சில தடங்கல்கள் வந்தாலும் இப்போது வெற்றி பெற்றுள்ளது அதிக தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

இந்த சீசனின் முதல் பாதியில் நான் நினைத்தது போல எனது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதால் பந்து வீச சிரமப்பட்டேன். மேலும் வயிற்றுப் பகுதியில் காயமும், வயதாகிக்கொண்டே போவதால் கஷ்டமாகவும் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டி20க்கு வந்ததால் அந்த ரிதம் கிடைக்காமல் நான் கொஞ்சம் அவதிப்பட்டேன். ஆனால் இந்த முறை நாங்கள் அனைவருமே சிறப்பாக பந்தினை கொண்டு செயல்பட்டிருந்தோம். இரண்டாவது இன்னிங்சில் அந்த அளவுக்கு பனியே இல்லை.

எங்கள் அணியின் பலமே அனுபவம் வாய்ந்த வீரர்களும், இளம் வீரர்களும் ஒரே எனர்ஜியுடன் இருந்து வருவது தான். இதே வேகத்துடன் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என அஸ்வின் கூறியுள்ளார்.

சற்று முன்