- Advertisement 3-
Homeவிளையாட்டுஉங்களை நினைச்சா சிரிப்பு தான் வருது.. வாய் காட்டிய வாகனுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

உங்களை நினைச்சா சிரிப்பு தான் வருது.. வாய் காட்டிய வாகனுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக கிரிக்கெட் போட்டிகளை ஆடி வெற்றி பெறும் சமயத்தில் ஓரளவுக்கு பாராட்டி விட்டு, அதுவே இந்திய அணி ஒரு தோல்வி அடைந்தாலே விமர்சனம் செய்ய முதல் ஆளாக வந்து விடுபவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். சமீபத்தில் மிகவும் மோசமாக இந்திய அணியை அவர் விமர்சனம் செய்து கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த போது கடுமையான விமர்சனத்தை அவர்கள் சந்தித்து இருந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களே இந்திய அணியின் திறன் பற்றி கமெண்ட் செய்திருந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கேல் வாகனும் கூட சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியை குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் மைக்கேல் வாகன், இதுதான் சாக்கு என கடந்த 10 வருடங்களாக திறமை இருந்தும் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்ல முடியவே இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பொதுவாகவே இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் மைக்கேல் வாகனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் உள்ளிட்ட சிலர் தங்களின் தகுந்த பதிலடியை கொடுத்து வாகனை ஆஃப் செய்து விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், வாகனுக்கு தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். “மைக்கேல் வாகன் கூறியது போலவே நாங்கள் கடந்த பல வருடங்களாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மை தான். இருந்த போதிலும், நாங்கள் சர்வதேச போட்டியில் இந்தியாவை பவர் ஹவுஸ் என்று தான் குறிப்பிட்டு வருகிறோம்.

- Advertisement 2-

அது மட்டுமில்லாமல், வெளிநாட்டுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு அங்கே நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதிலும் நாங்கள் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறோம். மைக்கேல் வாகன் அப்படி கூறியதில் இருந்தே இந்தியாவில் உள்ள பலரும் கூட இந்திய கிரிக்கெட் அணி குறைந்த வெற்றியை பெறும் அணியாக உள்ளதா என பேச தொடங்கியுள்ளனர். ஆனால் அதனை எல்லாம் நினைத்து பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

இரண்டாவது டெஸ்டில் தெ. ஆ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒரு வேளை அவர்கள் முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் எடுத்திருந்தால் 65 ரன்களுக்கு கூட ஆல் அவுட்டாகி இருக்கலாம் அல்லவா. 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தவித்த போது கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் எங்களை மீட்டெடுத்தது” என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சற்று முன்