- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வினை வெளியே அனுப்பிட்டு இவரை உள்ள கொண்டு வாங்க... இந்திய அணிக்கு சேவாக் அட்வைஸ்

அஸ்வினை வெளியே அனுப்பிட்டு இவரை உள்ள கொண்டு வாங்க… இந்திய அணிக்கு சேவாக் அட்வைஸ்

- Advertisement 1-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் வந்த இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும், விராட் கோலி – ராகுல் இருவரும் பொறுப்புடன் விளையாடி இந்தியாவுக்கு வெற்றியை பெற்று கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மைதானத்தில் பவுண்டரி அளவு 55 மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதால், ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இதுகுறித்து டெல்லி மண்ணை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் சேவாக் பேசும் போது, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு வழங்கப்படலாம். அவருக்கு பதிலாக ஷமி விளையாட வாய்ப்புகள் உள்ளது. மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் ஷமி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல் மைதானம் சிறிய அளவு கொண்டது. அதுமட்டுமல்லாமல் அஸ்வினின் வயதை கணக்கிட்டு அவரை முக்கியமான போட்டிகளில் மட்டும் களமிறக்க வேண்டும்.அதேபோல் கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் விளையாட சம்மதிக்க வைத்ததற்கும், விக்கெட் கீப்பிங் செய்ய சம்மதிக்க வைத்ததற்கும் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

- Advertisement 2-

ஏனென்றால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் கேஎல் ராகுல் மூலம் வலிமையாக காணப்படுகிறது. ஒருவேளை கேஎல் ராகுல் தொடக்க வீரராக மட்டுமே களமிறங்க முடிவு செய்திருந்தால், நாம் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவை மட்டுமே நம்பியிருந்திருக்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை, சேப்பாக்கம் போட்டியில் களமிறங்கிய போது 2 விக்கெட்டுகள் சரிந்துவிட்டது. அதனால் களத்தில் சில நிமிடங்கள் விளையாடி இருக்க வேண்டும்.

இளம் வீரர் என்பதால் உடனடியாக அட்டாக் செய்ய நினைத்தார் என்று நினைக்கிறேன். நிச்சயம் இதுபோன்ற அனுபவங்களில் இருந்தும், தவறுகளில் இருந்தும் கற்றுக் கொள்வார். என்னை பொறுத்தவரை விமர்சிப்பது எளிதான ஒன்று. அதேபோல் தான் இஷான் கிஷனும். பந்து வரும் திசையை நோக்கி பேட்டை சுழற்ற வேண்டும் என்று நினைத்துள்ளார். அதில் தவறு இல்லை. ஆனால் பந்து எவ்வளவு தூரத்தை வருகிறது என்பதை கணிக்க தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்