- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் செஞ்சது தப்பு தான்.. சர்பராஸ் சந்தித்த துயரம்.. கலங்கி வருத்தம் தெரிவித்த ஜடேஜா..

நான் செஞ்சது தப்பு தான்.. சர்பராஸ் சந்தித்த துயரம்.. கலங்கி வருத்தம் தெரிவித்த ஜடேஜா..

- Advertisement 1-

கேஎல் ராகுல், கோலி என பல சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில், ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா என அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இங்கிலாந்து அணியை மூன்றாவது டெஸ்டில் எதிர்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி. மேற்குறிப்பிட்ட வீரர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலானோர், இன்னும் 10 டெஸ்ட் போட்டிகள் கூட ஆடாதவர்கள்.

அதிலும் இந்த போட்டியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரேல் என இரண்டு இளம் வீரர்கள் முதல் சர்வதேச போட்டியில் காலடி எடுத்து வைக்கவும் செய்திருந்தனர். இப்படி அனுபவமில்லாத இந்திய டெஸ்ட் அணி, அசுர பலத்துடன் விளங்கும் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

கடந்த டெஸ்டில் இரட்டைச் சதமடித்து சாதனை புரிந்த ஜெய்ஸ்வால், 10 ரன்களிலும், இதே போல சென்ற போட்டியில் சதமடித்த கில் ஒரு ரன் கூட சேர்க்காமலும் அவுட்டாகினர். இவர்களை போல மற்றொரு இளம் வீரர் ராஜத் படிதார் 5 ரன்களில் அவுட்டாக, இந்திய அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் கைகோர்த்த ரோஹித் – ஜடேஜா ஜோடி, போட்டியின் போக்கையே மாற்றியது. முதல் இரண்டு டெஸ்டில் 40 ரன்களைக் கூட ஒரு இன்னிங்சில் தாண்டாத ரோஹித் ஷர்மா, இந்த முறை கேப்டன் என்ற பொறுப்புடன் மிக சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார்.

இவர் 131 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஜடேஜாவுடன் சேர்ந்து 204 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அவர் அமைத்து சாதனை புரிந்திருந்தார். ரோஹித் அவுட்டான பின்னர் தனது முதல் சர்வதேச டெஸ்டில் பேட்டிங் செய்ய வந்த சர்பராஸ் கான், அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். நேர்த்தியான ஆட்டத்துடன் அனுபவம் வாய்ந்த ஒருவரை போல சர்பராஸ் ஆடிய விதம், அனைவரையம் வெகுவாக கவர்ந்திருந்தது.

- Advertisement 2-

இவருடன் இணைந்த ஜடேஜாவும் நன்றாக ஆடி சதமடித்து அசத்தி இருந்தார். இதனிடையே, துரதிஷ்டவசமாக, போட்டிக்கு நடந்த குழப்பம் ஒன்றின் காரணமாக 62 ரன்களில் சர்பராஸ் கான் ரன் அவுட்டானார். 66 பந்துகளில் 9 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 62 ரன்கள் சேர்த்த சர்ப்ராஸ், சதமடிக்கும் வாய்ப்பை இழந்தது ரோஹித் உள்ளிட்ட பலரையும் கூட ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே, ஜடேஜாவின் தவறான முடிவால் தான் சர்பராஸ் கான் அவுட் ஆனதாக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். ஜடேஜா சதமடித்த போதும் அவர் சர்ப்ராஸை அவுட் செய்ததை பெரிதாக அவர்கள் பேசி வரும் நிலையில், இது பற்றி ஜடேஜாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

“சர்பராஸ் கான் அவுட்டானது அவருக்கு மோசமானதாக அமைந்து விட்டது. என்னுடைய தவறால் தான் அப்படி நடந்தது. சர்பராஸ் கான் சிறப்பாக ஆடினார்” என தனது தவறை உணர்ந்து ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்