- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க கப் வாங்குறத இனி தடுக்க முடியாது.. வெத்தா இருந்த ஆர்சிபி ரசிகர்கள கெத்தா மாத்துன...

நாங்க கப் வாங்குறத இனி தடுக்க முடியாது.. வெத்தா இருந்த ஆர்சிபி ரசிகர்கள கெத்தா மாத்துன சம்பவம்…

- Advertisement 1-

இதுவரை 16 ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்து விட்டது. தொடர்ந்து 17வது ஐபிஎல் தொடருக்கான முதல் 21 போட்டிகளின் அட்டவணையும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் ஆர்சிபி அணியை கடந்த 16 ஆண்டுகளாக ஒரு விஷயம் தொடர்ந்து துரத்திக் கொண்டுதான் வருகிறது. அதாவது கடந்த 16 முறையும் ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது கிடையாது. கோலி, டிவில்லியர்ஸ், கெயில், டிராவிட், அனில் கும்ப்ளே, ராஸ் டெய்லர், காலிஸ் என பல சிறப்பான வீரர்களை அந்த அணி கண்ட போதிலும் அதிர்ஷ்டம் இல்லாததன் காரணமாக அவர்களால் ஏனோ ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட தொட்டு பார்க்க முடியவில்லை.

ஒரு சில முறை சிறந்த வாய்ப்பு அவர்கள் பக்கம் இருந்த போதிலும் இறுதிப்போட்டியில் சொதப்பியதன் காரணமாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழக்க நேரிட்டிருந்தது. ஆனால் இந்த முறை எப்படியாவது அந்த அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றி விடும் என்ற ரசிகர்கள் நம்பி வரும் நிலையில், ஒரு சில விஷயங்கள் தற்போது நடந்துள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு இன்னும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

நடந்து முடிந்த மினி ஐபிஎல் ஏலத்தில், தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்த போதிலும் அவர்களை அணியில் எடுக்க முயற்சி செய்யாமல், லாக்கி பெர்குசன், அல்சாரி ஜோசப் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி. இது அதிகமான விமர்சனங்களை சந்திக்க முன்னதாக கேமரூன் கிரீனை மும்பை அணியில் இருந்து டிரேடிங் முறையில் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

- Advertisement 2-

ஆனால், தற்போது ஆர்சிபி அணியில் ஆடிவரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் தொடர்ந்து அனைத்து தொடர்களுமே நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். அப்படி ஒரு நிலையில் தான் அவரைப் போல மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான டெஸ்டில் 3 விக்கெட்டுகளை எடுத்து பட்டையைக் கிளப்பி உள்ளார்.

இது போல, அல்சாரி ஜோசப்பும் சிறந்த ஃபார்மில் இருக்கும் நிலையில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் இதற்கு முன்பாக சில போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆர்சிபி அணியின் பலவீனமாக அவர்களின் பந்து வீச்சு பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

இதே ஃபார்மை ஐபிஎல் தொடரில் அவர்கள் தொடரும் பட்சத்தில், கோலி, பாப் டுப்ளசிஸ், மேக்ஸ்வெல், கிரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் என அனைவரின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்து விட்டால் நிச்சயம் 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கோப்பையை கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என அவர்களின் ரசிகர்கள் தெம்புடன் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்