- Advertisement -
Homeகிரிக்கெட்வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறக்கப்படும் KKR வீரர்? கோலி, ரோகித்துக்கு டி20 அணியில் இடம் கிடையாதா?

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறக்கப்படும் KKR வீரர்? கோலி, ரோகித்துக்கு டி20 அணியில் இடம் கிடையாதா?

-Advertisement-

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் மூலம் கண்டெடுக்கப்பட்ட இளம் வீரர்களில் ஒருவர் ரிங்கு சிங். கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கிடைத்துள்ளார் ரிங்கு சிங். பினிஷிங்கில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார். 25 வயதாகும் ரிங்கு சிங் இந்த சீசனில் காட்டிய அதிரடி அவருக்கு விரைவில் இந்திய கிரிக்கெட்டின் கதவுகள் திறக்க வழிகாட்டும் என சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை விளாசி அணிக்கு நம்பமுடியாத வெற்றியை பெற்றுத் தந்து, அந்த இன்னிங்ஸ் மூலம் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ரிங்கு சிங். அவர் இந்த ஐபிஎல் சீசனில் 59.25 சராசரி மற்றும் 149.53 ஸ்ட்ரைக் ரேட்டில் 474 ரன்கள் எடுத்தார்.

இதனால் அவரை விரைவில் இந்திய டி20 அணியில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய டி20 அணியில் கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பல மாற்றங்கள் செய்து வருகிறது பிசிசிஐ. இந்நிலையில் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

ஜூலை 12 ஆம் தேதி தொடங்க உள்ளன இந்த தொடரில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இன்னும் டி 20 போட்டிக்கான அணி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 அணியில் அழைக்கப்படுவதில்லை. அதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் அவர்கள் அணியில் இருக்க மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் இளம் வீரர்கள் கொண்ட டி20 அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகிய ஐபிஎல் ஹீரோக்கள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் பரவி வருகின்றன.  விரைவில் டி20 போட்டிககான அணிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்