- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி ஹர்திக் பாண்டியா வரிசையில் ரிங்கு சிங் வருவார்.. அவரிடம் அந்த தகுதியுள்ளது.. அபிஷேக் நாயர்...

தோனி ஹர்திக் பாண்டியா வரிசையில் ரிங்கு சிங் வருவார்.. அவரிடம் அந்த தகுதியுள்ளது.. அபிஷேக் நாயர் டிப்ஸ்..!

- Advertisement 1-

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் இங்கிலிஸ் 50 பந்துகளில் 110 ரன்களை விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்துகளிலேயே 5 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் அடுத்த பந்துகளில் இந்திய அணி வீரர்கள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் ஆட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. கடைசி 1 பந்தில் ஒரு ரன் சேர்க்க வேண்டும் என்ற நிலை வந்த போது ரிங்கு சிங் அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். அந்த அபாட் வீசிய பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 19.5 ஓவர்களிலேயே வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இருப்பினும் இந்திய அணியின் வெற்றிக்கு ரிங்கு சிங் தான் காரணமாக அமைந்தார். ரிங்கு சிங் குறித்து முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் பேசும் போது, ஃபினிஷர் ரோலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி பல ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வந்தார். அதேபோல் தற்போதைய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஃபினிஷர் ரோலில் செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் ரிங்கு சிங் விரைவில் இணைவார்.

- Advertisement 2-

ஏனென்றால் அவர்கள் இருவரிடமும் பார்த்த அதே குணங்கள் மற்றும் தன்னம்பிக்கையை ரிங்கு சிங்கிடமும் பார்க்கிறேன். அவர் சேர்த்த 22 ரன்கள் குறைவாக இருந்தாலும், அதன் மதிப்பு மிகப்பெரியது. நிச்சயம் ரிங்கு சிங்கால் ஒவ்வொரு முறையும் இதேபோன்று ஆட்டத்தை ஃபினிஷ் செய்ய முடியாது. ஆனால் அவரை போன்ற வீரர்கள் அணியில் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் மற்றும் ரிங்கு சிங் இருவரும் கேகேஆர் அணியில் ஒன்றாக இருந்தவர்கள். 2019ஆம் ஆண்டு ஏலத்தின் போது ரிங்கு சிங்கை பாதுகாத்து கேகேஆர் அணியிலேயே தொடர வைத்தவர் அபிஷேக் நாயர். அதுமட்டுமல்லாமல் தனது வீட்டிலேயே தங்க வைத்து அபிஷேக் நாயர், ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்