- Advertisement -
Homeகிரிக்கெட்குல்தீப் வேற லெவல்.. நாங்க ஜெயிச்சாலும் எங்க நிலைமை இதான்.. - ரிஷப் பந்த்

குல்தீப் வேற லெவல்.. நாங்க ஜெயிச்சாலும் எங்க நிலைமை இதான்.. – ரிஷப் பந்த்

-Advertisement-

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி முடிவுக்கு வந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்றே சொல்லலாம். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிஷேக் போரேல், 65 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் அதிகமாக விளங்கவும் அதிக பங்கு வகித்திருந்தார்.

அவருடன் இணைந்து ஜேக் ஃப்ரேஷர் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அதிகம் கைகொடுத்திருந்தது. தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியிலும் ஆரம்பத்தில் ஜெயஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இன்னொரு பக்கம் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பை உணர்ந்து ஆடியதுடன் மட்டும் இல்லாமல் தேவைப்படும் இடங்களில் எல்லாம் சிக்சர் மற்றும் ஃபோர்களையும் பறக்க விட்டிருந்தார்.

டெல்லி அணிக்கு எதிராக இதுவரை எந்த அணியும் ஐபிஎல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்தது கிடையாது என்ற சூழலில் தான் ராஜஸ்தான் அணி ஆடிய ஆட்டம் டெல்லிக்கு மிகப்பெரிய தலைவலி கொடுத்திருந்தது. ஆனால், கடைசி ஆறு ஓவர்களில் போட்டியே மாறத் தொடங்க, சாம்சன் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

அதே போல, 18 வது ஓவர் வீசிய குல்தீப் யாதவ், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றியையும் உறுதி செய்திருந்தார். இந்த வெற்றியால் டெல்லி அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், இனி வரும் போட்டிகளிலும் வெற்றியை உறுதி செய்தால் நிச்சயம் இந்த முறை அடுத்த சுற்றுக்கு நுழைந்து விடலாம்.

-Advertisement-

இந்த வெற்றிக்கு பின் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், “எங்களது பந்து வீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது பார்ப்பதற்கே அருமையாகவும், பாசிட்டிவாகவும் அமைந்திருந்தது. ஒவ்வொரு போட்டியில் இருந்தும் நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். நாங்கள் வென்றாலும் தோல்வி அடைந்தாலும் தலையே கீழே போட்டுவிட்டு முன்னோக்கி நடப்போம்.

எப்போதும் போல, குல்தீப் எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தால் அது சிறப்பாக இருக்கும் என்பது தான் முக்கியமான எங்களின் செயல்முறை திட்டம்” என ரிஷப் பந்த் கூறினார்.

-Advertisement-

சற்று முன்