- Advertisement -
Homeகிரிக்கெட்19 வது ஓவர் அந்த பையனுக்கு கொடுக்க காரணம்.. நான் அடிச்ச சிக்ஸ்னால தான்.. ரிஷப்...

19 வது ஓவர் அந்த பையனுக்கு கொடுக்க காரணம்.. நான் அடிச்ச சிக்ஸ்னால தான்.. ரிஷப் பந்த் பேச்சு..

-Advertisement-

இந்த சீசனில் இதுவரை 9 போட்டியில் அடியுள்ள டெல்லி அணி முதல் ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்ததுடன் மட்டுமில்லாமல் கடைசி இடங்களில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

ரிஷப் பந்த், ஜேக் ஃப்ரெஷர் உள்ளிட்ட வீரர்களின் அதிரடி ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்து வருவதுடன் மட்டும் இல்லாமல் குல்தீப் யாதவ், அக்சர் படேல் என பல சிறப்பான பந்து வீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டு அணியின் வெற்றியையும் உறுதி செய்து வருகின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் ஆடிவரும் ரிஷப் பந்த், இந்த போட்டியில் 88 ரன்கள் அடித்திருந்ததன் காரணமாக, அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் எட்டிப் பிடித்துள்ளார்.

இப்படி பல சாதகமான விஷயங்களால் மேம்பட்டு வரும் டெல்லி அணி, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 224 ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நூலிழையில் வெற்றியையும் அவர்கள் கோட்டை விட்டிருந்தது அந்த அணியின் ரசிகர்களை கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இதற்கு பின் அவர் பேசுகையில், “போட்டியின் 19 வது ஓவரை நான் ரசீக் சலாமிற்கு கொடுக்க காரணம் நோர்ஜே ஓவர் பெரிதாக எடுபடவில்லை என்பதால் தான். டி 20 எப்போதுமே ஒரு வேடிக்கையான போட்டி தான். 14 முதல் 15 ஓவருக்கு பிறகு, பந்து மிக அழகாக வந்தது. இதனால் நன்றாக பந்துவீசி கொண்டிருந்த ரசீக் மீது நம்பிக்கை வைத்து பந்தை கொடுத்தோம்.

-Advertisement-

ஒரு கேப்டனாக சில நேரம் இது போன்ற உள்ளுணர்வுகள் வந்து கொண்டே இருக்கும். அது இந்த முறை வேலை செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. 43 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் இழந்த போது அப்படியே தொடர்ந்து ஆடுவதை மட்டுமே நினைத்து அந்த அணியின் ஸ்பின்னர்களை இலக்காகவும் வைத்திருந்தோம்.

மிடில் ஓவர்களில் நான் ஆடும் போது எப்போதும் சிறப்பாகவே நினைப்பேன். மேலும் போட்டியில் எப்போதுமே நான் எனது 100 சதவீதத்தை அளிக்க வேண்டும் என்பது மகிழ்ச்சியை தரும். இந்த போட்டியில் நான் அடித்த முதல் சிக்சர் தான் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது” என ரிஷப் பந்த் கூறினார்.

-Advertisement-

சற்று முன்