- Advertisement 3-
Homeவிளையாட்டுஆர்சிபி கூட நான் ஆடியிருந்தா ஜெயிச்சுருப்போம்.. ஜஸ்ட் மிஸ்.. உற்சாகத்திலும் புலம்பிய ரிஷப்..

ஆர்சிபி கூட நான் ஆடியிருந்தா ஜெயிச்சுருப்போம்.. ஜஸ்ட் மிஸ்.. உற்சாகத்திலும் புலம்பிய ரிஷப்..

- Advertisement 1-

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதிய போட்டி முடிந்த பின்னர் மீண்டும் ஒருமுறை புள்ளி பட்டியலில் மிகப்பெரிய ட்விஸ்ட் அரங்கேறி உள்ளது. இந்த சீசனில் முதல் அணியாக 14 போட்டிகளை ஆடி முடித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ். இதில் ஏழு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகள் என இருக்க தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.

மீதமுள்ள போட்டிகளின் அடிப்படையில் தான் டெல்லியின் பிளே ஆப் வாய்ப்பும் தெரியும் என்பதால் அதுவும் மிக குறைவாகவே உள்ளது. ஹைதராபாத் 12 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றுள்ளதால் இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே டெல்லியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சிஎஸ்கே அணி பெங்களூர் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலோ அல்லது ஆர்சிபி வெற்றி பெற்றாலும் கூட டெல்லி அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய்விடும்.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் தங்களின் கடைசி லீக் போட்டியில் லக்னோ அணியை சந்தித்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியில் அபிஷேக் போரல், ஸ்டப்ஸ் ஆகியோரின் உதவியுடன் 208 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணியில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமும் கண்டனர்.

ஆனால் நிக்கோலஸ் பூரன் தனியாளாக ஸ்கோரை மீட்டெடுக்க அவரும் அவுட்டான பின்னர் மீண்டும் சிறிய இடைவேளையில் சில விக்கெட் விழுந்தது. இதன் பின்னர் இளம் வீரரான அர்ஷத் கான் திடீரென விஸ்வரூபம் எடுத்து சிக்ஸர்களை பறக்க விட டெல்லி அணியின் வெற்றிக்கும் நெருக்கடி உருவானது. கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ரன்களை அதிகம் கொடுக்காமல் தங்களின் வெற்றியையும் உறுதி செய்தனர்.

- Advertisement 2-

இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், “நிச்சயம் பூரன் சற்று நெருக்கடியை கொடுத்திருந்தார். ஆனால் நாங்கள் அதை கட்டுப்படுத்த சிறந்த திட்டங்களையும் கையில் வைத்திருந்தோம். எங்களின் டோட்டல் ஸ்கோர் நன்றாக இருந்ததால் நாங்கள் நல்ல பந்துகளை வீசும் முயற்சியில் களமிறங்கி இருந்தோம்.

மேலும் இந்த சீசனின் தொடக்கத்தை அதிக நம்பிக்கையுடன் தான் ஆரம்பித்திருந்தோம். ஆனாலும் நடுவே சில காயம் தொந்தரவு கொடுத்தாலும் தற்போதும் கடைசி போட்டிக்கு பிறகு கூட நல்ல ஒரு பொசிஷனில் தான் நாங்கள் இருக்கிறோம். ஆர்சிபி அணிக்கு எதிராக நான் களமிறங்கி இருந்தால் நிச்சயம் நாங்கள் பிளே ஆப் செல்லும் அணிகளில் ஒன்றாக இருந்திருப்போம்.

நான் இப்படி ஒரு அற்புதமான கம்பேக் கொடுத்தது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆடும் போதிலும் இந்தியா முழுக்க இப்படி ஒரு ஆதரவு இருப்பதும் என்னை உற்சாகப்படுத்தி வருகிறது. எப்போதுமே நான் கிரிக்கெட் ஆடி கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

சற்று முன்