- Advertisement -
Homeகிரிக்கெட்இதுக்காக தான் ரிஷப் பந்த் ஆட்ட நாயகன் விருது ஜெயிச்சாரா.. டி 20 உலக கோப்பைக்கு...

இதுக்காக தான் ரிஷப் பந்த் ஆட்ட நாயகன் விருது ஜெயிச்சாரா.. டி 20 உலக கோப்பைக்கு அவரே கொடுத்த வார்னிங்..

-Advertisement-

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் டி 20 உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெற உள்ளதால் இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று மிகப்பெரிய ஒரு விவாதமே ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி விக்கெட் கீப்பிங் என்ற இடத்தில் தான் தற்போது அதிக வீரர்கள் போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஜிதேஷ் ஷர்மா, கே எல் ராகுல் உள்ளிட்ட பல விக்கெட் கீப்பர்கள் சிறப்பாக ஆடி வருவதால் இதில் யார் யாருக்கு இந்திய அணியின் உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதே மிகப்பெரிய புதிராக உள்ளது. அந்த வகையில் இந்த முறை இதில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வீரர் தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்.

கார் விபத்தில் சிக்கியிருந்த இவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களம் கண்டிருந்த நிலையில் ஆரம்பத்தில் இவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி என அனைத்துமே எடுபடவில்லை. இதனால் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த டெல்லி அணி, அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. தற்போது லக்னோ மற்றும் குஜராத் அணியை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி பட்டையை கிளப்பி உள்ளனர்.

ஒன்பதாவது இடத்தில் இருந்த டெல்லி அணி குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் குஜராத் அணியை 89 ரன்களில் ஆல் அவுட் செய்து அந்த இலக்கை 8.5 ஓவர்களிலேயே எட்டியுள்ளதால் ரன் ரேட்டும் படுபயங்கரமாக எகிறியுள்ளது.

-Advertisement-

இதனால் இந்த தொடரில் இனிவரும் போட்டிகளில் மற்ற அணிகளுக்கு கடும் சவாலாகவும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் இந்த தொடரில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை செய்து பட்டையை கிளப்பி உள்ளார் ரிஷப் பந்த். மிகப்பெரிய காயத்திலிருந்து ரிஷப் பந்த் மீண்டு வந்ததால் அவரால் முன்பை போல கீப்பிங் செய்ய முடியுமா என்ற கேள்வியும் சந்தேகங்களும் அதிகமாக இருந்தது.

ஆனால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கேட்ச்களை அற்புதமாக பிடித்திருந்த பந்த், இரண்டு ஸ்டம்பிங்கையும் மின்னல் வேகத்தில் செய்திருந்தார். உலக கோப்பைக்கு ஃபிட்டாக இருப்பதை மறைமுகமாக இதன் மூலம் சொல்லி உள்ள ரிஷபிற்கு கீப்பிராக சிறப்பாக செயல்பட்டதற்காகவே ஆட்டநாயகன் விருது கிடைத்திருந்தது.

பெரும்பாலும் பேட்டிங் மற்றும் பவுலிங் திறனை கொண்டு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படும் நிலையில் இரண்டு ஸ்டம்பிங், இரண்டு கேட்ச்கள் உட்பட கடைசி கட்டத்தில் ஒரு சிக்சருடன் 16 ரன் அடித்ததற்காகவும் ரிஷப் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்