- Advertisement -
Homeகிரிக்கெட்தமிழக வீரர்கள் யாருமே இல்ல.. அப்ப இந்தியா உலக கோப்பை ஜெய்க்குறதும் கஷ்டம்.. இப்படி ஒரு...

தமிழக வீரர்கள் யாருமே இல்ல.. அப்ப இந்தியா உலக கோப்பை ஜெய்க்குறதும் கஷ்டம்.. இப்படி ஒரு பின்னணியா..

-Advertisement-

தற்போது ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதேவேளையில் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள டி 20 உலக கோப்பைக்கான அணி வீரர்களையும் அனைத்து அணிகளும் வெளியிட்டு வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தங்களின் ஆடும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டு இருந்தது.

அந்த வகையில் இந்த முறை டி 20 உலக கோப்பைக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியலும் தற்போது வெளியாகியது. ரோஹித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஷிவம் துபே, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த பட்டியலில் ரிசர்வ்டு வீரர்களாக கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் பெயரும் உள்ளன.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே பெயர்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர்கள் தற்போது இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளனர். ஆனால் அதே வேளையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் ராகுல், ஃபினிஷராக உருவெடுத்துள்ள ரிங்கு சிங் ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது அதிக கேள்விகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதும் அதிக சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சாஹல் டி 20 உலக கோப்பையில் இடம் பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பந்து வீச்சில் பும்ராவை தவிர யாரும் ஃபார்மில் இல்லை என்பது இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கும் என்றும் தெரிகிறது.

-Advertisement-

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்க, சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இன்னொரு பக்கம் சில முக்கியமான தமிழக வீரர்கள் இடம்பெறாமல் போனதும் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் நடராஜன் இந்த சீசனில் இதுவரை ஏழு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணியின் சிறந்த பினிஷராக இருந்து வரும் நிலையில் அவரது பெயரும் இடம் பெறவில்லை. இதே போல தமிழக வீரரான சாய் சுதர்சன், இந்த சீசனில் 400 ரன்களை கடந்திருந்த போதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் தமிழக வீரர்கள் இந்த லிஸ்டில் இல்லாததால் இந்திய அணி உலக கோப்பையை வெல்லாது என ஒரு புள்ளி விவரத்தையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்திய அணி இதுவரை வென்ற ஐசிசி கோப்பைகள் அனைத்திலுமே ஒரு தமிழக வீரர் இடம் பெற்றிருந்தனர். 1983 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற போது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அணியில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கும், 2011 மற்றும் 13 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்ற போது ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தனர். அதன் பின்னர் நடந்த சில ஐசிசி தொடர்களில் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று கோப்பை வெல்ல முடியாமல் போனாலும் இதுவரை வென்ற அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதனால் இந்த முறை தமிழக வீரர்கள் யாரையும் தேர்வு செய்யாததால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லாது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்