- Advertisement 3-
Homeவிளையாட்டுபயிற்சிலயே இப்படி நடந்துச்சா.. தோல்வி பயம் காட்டிய ரோஹித்.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

பயிற்சிலயே இப்படி நடந்துச்சா.. தோல்வி பயம் காட்டிய ரோஹித்.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததையடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று சமநிலையில் உள்ளது. ஏறக்குறைய 10 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (15.12.2024) நடைபெற உள்ளதால் இரு அணிகளுமே நிறைய மாற்றங்களை செய்து தற்போது தயாராகி வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை மட்டும் அறிவித்திருந்த இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளுக்கான அணியையும் சமீபத்தில் அறிவித்தது. இதில் பெரும்பாலும் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ள சூழலில், ராகுல் இடம்பெற்றாலும் மூன்றாவது டெஸ்டில் ஆடவில்லை. அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாராவுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூழலில், சர்ப்ராஸ் கான் அல்லது துருவ் ஜூரேல் உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார்கள் என்றும் தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியை நாம் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. முதல் போட்டியில் இந்தியா தான் வெல்லும் என நினைத்த நிலையில் அவை அனைத்தையும் மாற்றி இங்கிலாந்து அணி வெற்றி பெற உதவி இருந்தார் ஸ்டோக்ஸ். இந்திய மண்ணில் அவர்களும் மிக அச்சுறுத்தலான வகையில் தயாராகி வருவதால் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருப்பதாக தெரிகிறது.

இதனிடையே வலைப்பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான செய்தி, ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 24 மற்றும் 31 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா, இரண்டாவது டெஸ்டிலும் 14 மற்றும் 13 ரன்கள் தான் எடுத்திருந்தார்.

- Advertisement 2-

அவரது பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்து வரும் சூழலில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியின் போது அடுத்தடுத்த பந்துகளில் அவர் போல்டானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நெட் பௌலரின் பந்துக்கே ரோஹித் தடுமாறி அவுட்டாகி வருவதால் இங்கிலாந்து அணி வீரர்களை எப்படி சமாளிக்க போகிறார் என்ற ஏக்கமும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

அது மட்டுமில்லாமல், 36 வயதாகும் ரோஹித் சர்மா, விரைவில் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி விட்டோ அல்லது ஓய்வினை அறிவித்து விட்டோ ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என்றும் ஒரு பக்கம் தகவல்கள் வலம் வருகிறது.

சற்று முன்