- Advertisement -
Homeகிரிக்கெட்சாவு பயத்தை காட்டிய குஜராத்.. சிங்கம் மாதிரி வந்து நின்ன தினேஷ் கார்த்திக்.. மும்பைக்கு பல்ப்...

சாவு பயத்தை காட்டிய குஜராத்.. சிங்கம் மாதிரி வந்து நின்ன தினேஷ் கார்த்திக்.. மும்பைக்கு பல்ப் கொடுத்த ஆர்சிபி..

-Advertisement-

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஆட வேண்டிய ஆட்டத்தை தற்போது கடந்த சில போட்டிகளாகவே தொடர்ந்து ஆடி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதல் எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட பெங்களூர் அணி, ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் தருவாயிலும் எட்டி இருந்தது.

மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டால் தான் அவர்களால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற சூழலில் தான் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றிகளை குவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் குஜராத் அணியை பெங்களூரு அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத்தின் பேட்ஸ்மேன்கள் நல்லதொரு ரன்னை சேர்க்கவே கடுமையாக திணறி இருந்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஹா 1 ரன்னிலும், கில் 2 ரன்னிலும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததால் ஆரம்பத்திலேயே அவர்களின் பேட்டிங் லைன் அப் நிலைகுலைந்து போனது.

ஆனாலும் பின்னால் வந்த ஷாருக்கான், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா ஆகியோர் நல்ல பங்களிப்பை அளித்தும் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தது. 19 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை அவர்கள் இழந்த போது நிச்சயம் 120 ரன்கள் தாண்டுவது சிரமமாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

-Advertisement-

ஆனால் ஒரு சில வீரர்கள் அதிரடி காட்டி சிறப்பாக ஆடியதால் அந்த அணியின் ஸ்கோர் 140 ரன்களை கடந்திருந்தது. இருந்தாலும் இந்த சீசனில் 200 ரன்களுக்கு மேல் அசால்டாக சேஸ் செய்வது அதிகம் நடந்து வருவதால் பெங்களூரு அணிக்கு மிகக் குறைவான இலக்காகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, ஆறு ஓவர்களிலேயே ஒரு விக்கெட் மட்டும் இழந்து 92 ரன்களை சேர்த்து விட்டனர். பாப் டு பிளெஸ்ஸிஸ், 23 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 1 ரன்னிலும், படிதர், மேக்ஸ்வெல் மற்றும் க்ரீன் ஆகியோர் முறையே 2, 4 மற்றும் 1 ரன்னிலும் அவுட்டாக, 116 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.

கையில் இருந்த வெற்றி திடீரென திசை திரும்பியது போல இருக்க ஆர்சிபி ரசிகர்கள் ஒரு நிமிடம் உறைந்து போயினர். ஆனால், தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி, பெங்களூரு அணியின் ரசிகர்களை நிம்மதிப்படுத்த இலக்கையும் அவர்கள் 14 வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றியை பெற்று தங்களின் ரன் ரேட்டையும் உயர்த்தி உள்ளனர். மேலும் இந்த தோல்வியால் குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பும் மங்கிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல, பல போட்டிகளாக கடைசி இடத்தில் இருந்து வந்த ஆர்சிபி, இந்த வெற்றியின் மூலம் முன்னேற்றம் காண, மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

-Advertisement-

சற்று முன்