- Advertisement -
Homeவிளையாட்டுசச்சினின் காலில் விழு என்ற சக வீரர்கள்.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவம்... சச்சின் பகிர்ந்த...

சச்சினின் காலில் விழு என்ற சக வீரர்கள்.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவம்… சச்சின் பகிர்ந்த சுவாரசியம்

- Advertisement-

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த தொடரில் தனது மூன்றாவது சதத்தை விளாசியதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக தனது 50-வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் சாதனையையும் முறியடித்தார்.

இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த தொடரிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று பலராலும் கூறப்பட்ட வேளையில் இறுதி போட்டிக்கு முன்னரே அந்த சாதனையை அவர் படைத்து அனைவரையும் அசர வைத்துள்ளார். அதன்படி நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த அரையிறுதி போட்டியில் 113 பந்துகளை சந்தித்த விராத் கோலி 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 117 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான ஆட்டம் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஐம்பதாவது சதத்தை பதிவு செய்ததோடு சேர்த்து மேலும் ஒரு சச்சினின் சாதனையாக 20203-ஆம் ஆண்டு சச்சின் உலகக் கோப்பை தொடரில் அடித்த 673 ரன்களையும் தற்போது கடந்த விராட் கோலி புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 101 ரன்கள் சராசரியுடன் 711 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதம் மற்றும் 3 சதங்கள் அடங்கும். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் பலருக்கும் மத்தியில் விராட் கோலி ஐம்பதாவது சதத்தை விளாசியது அனைவரையும் வியக்க வைத்தது.

- Advertisement-

இந்நிலையில் போட்டியின் இடையே சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியை மைதானத்தில் வந்து வாழ்த்தி அவருடன் நடைபெற்ற முதல் சந்திப்பு குறித்த சுவாரசியமான சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : முதல் முறை இந்திய அணியின் ஓய்வறைக்கு விராட் கோலி வந்தபோது எங்களுடன் விளையாடிய சக வீரர்கள் விராட் கோலியிடம் சென்று நீ சச்சினின் காலைத் தொட்டு வணங்க வேண்டும். அவரது ஆசீர்வாதம் கிடைத்தால் உன்னுடைய கரியர் நன்றாக இருக்கும் என்று விளையாட்டாக கூறி இருக்கிறார்கள். அதனை கேட்ட என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அன்று 2008-ல் நான் பார்த்த விராட் கோலி ஒரு இளைஞனாக இருந்து இன்று மிகப்பெரிய வீரராக உருவெடுத்துள்ளார். வெகுவிரைவில் அவர் என்னுடைய இந்த சாதனையை முறியடித்து என்னுடைய மனதையும் தொட்டுவிட்டார். என்னுடைய இந்த சாதனையை மற்றொரு இந்திய வீரரே முறியடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுவும் இது போன்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அவர் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறினார். அதேபோன்று தனது சதம் குறித்து பேசிய விராட் கோலி : என்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் என்னுடைய ஹீரோ சச்சின் ஆகியோருக்கு மத்தியில் இப்படி ஒரு சதத்தை அடித்தது குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை என நெகிழ்ச்சியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்