- Advertisement 3-
Homeவிளையாட்டுநல்லா விளையாடியும் தோத்து போனோம்.. ஜீரணிக்கவே முடியல.. புலம்பித் தள்ளிய சாம் குர்ரான்..

நல்லா விளையாடியும் தோத்து போனோம்.. ஜீரணிக்கவே முடியல.. புலம்பித் தள்ளிய சாம் குர்ரான்..

- Advertisement 1-

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வந்த போதிலும் அவர்களால் வெற்றிகளை தொடர்ந்து குவிக்க முடியவில்லை. அந்த அணியில் கேப்டன்சி உள்ளிட்ட சில பிரச்சனைகள் விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், ஒரு அணியாக இந்த சீசனில் அவர்கள் சிறப்பாகவும் ஆடி வருகின்றனர்.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பல வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நிலையில், கடைசி ஓவரில் வெற்றியை இழக்கவும் செய்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரிலேயே வேறு எந்த அணிக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்ற நிலையில் வெற்றி பெறுவது போல இருந்தும் தோல்வியடைவதும் பஞ்சாப் அணிக்கு தான் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.

நடப்பு தொடரிலும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் ஆடிய போட்டியுடன் ஆறு போட்டிகள் ஆடியுள்ள பஞ்சாப் அணி இரண்டில் மட்டும் தான் வெற்றி கண்டுள்ளது. அதிலும் பஞ்சாப் அணி ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய போட்டியில் 147 ரன்கள் அடித்தும் ராஜஸ்தான அணியை கடைசி ஓவர் வரை கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஒரு பந்து மீதம் இருக்கும் போது தோல்வியை தழுவி இருந்தனர்.

மேலும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியை ஷிகர் தவானுக்கு பதிலாக சாம் குர்ரான் வழிநடத்தி இருந்ததுடன் சிறப்பாக பந்து வீசவும் செய்திருந்தார். இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த அவர், “பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங்கை சிறப்பாக தொடங்கவில்லை. அதே போல போட்டியின் முடிவிலும் நன்றாக செயல்படவில்லை. பேட்டிங்கில் கடைசி நிலை வீரர்கள் சிறப்பாக ஆடி 150 க்கு அருகில் வரை கொண்டு வந்தது அற்புதமாக இருந்தது.

- Advertisement 2-

பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டும் துரதிஷ்டவசமாக கடைசி ஓவர்களில் தோல்வி அடைந்தோம். எங்கள் திட்டங்களை சிறப்பாக வகுத்து பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இதனால் நிச்சயம் அடுத்த போட்டியில் அதிக நம்பிக்கையுடன் திரும்பி வருவோம் என்று நினைக்கிறேன். எங்களின் புதிய மைதானத்தில் சற்று சூழலுக்கு ஏற்ற வகையில் தயாராவது கடினமாக உள்ளது.

ஆனாலும் அதனை சிறப்பாக தக்க வைத்துக் கொண்டு முதல் போட்டியில் வென்று அடுத்த இரண்டு போட்டியில் மிக நெருக்கமாக சென்று தோல்வி அடைந்துள்ளோம். எங்கள் சொந்த மைதானத்தில் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததை ஜீரணிக்க கடினமாக தான் உள்ளது” என சாம் குர்ரான் தெரிவித்துள்ளார்.

சற்று முன்