- Advertisement 3-
Homeவிளையாட்டுபையன் பிரிச்சுட்டான்.. பும்ரா பந்தை அப்படி அடிச்சதெல்லாம்.. தோத்தாலும் கெத்தாக பேசிய சாம் குர்ரான்..

பையன் பிரிச்சுட்டான்.. பும்ரா பந்தை அப்படி அடிச்சதெல்லாம்.. தோத்தாலும் கெத்தாக பேசிய சாம் குர்ரான்..

- Advertisement 1-

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் எந்த ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டாலும் அவர்களது ஆட்டம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடாக தான் இருந்து வரும். யாருமே எதிர்பாராத போட்டியில் வெற்றிகளை குவிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, எளிதான போட்டியில் வெற்றியை கோட்டை விட்டு விடுவார்கள். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் தான்.

இதுவரை ஒரு போட்டியில் கூட முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் ரன் அடிக்க தவறியதன் காரணமாக தொடர்ந்து தோல்விகளை அடையும் நிலை தான் உருவாகியுள்ளது. ஆறு போட்டியில் ஆடியுள்ள பஞ்சாப் அணி, டெல்லி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி கண்டுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளனர்.

அந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர்களான அசுதோஷ் ஷர்மா மற்றும் சஷாங்க் சிங் உதவியுடன் ரன்களை குவித்து வரும் நிலையில் மும்பை அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த போட்டியிலும் மீண்டும் ஒருமுறை டாப் ஆர்டர் வரிசை ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 14 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.

இதனை தொடர்ந்து சஷாங்க் சிங், 41 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் அவுட்டாக, 8 வது வீரராக உள்ளே வந்த அசுதோஷ் ஷர்மா அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்தார். அவருக்கு பின்னர் 8 வது வீரராக வந்து அதிரடி காட்டிய அசுதோஷ் ஷர்மா, 61 ரன்களில் அவுட்டாக பஞ்சாப் அணி, 20 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் 3 வது வெற்றியை ருசித்தது. இந்த தொடரில் பஞ்சாப் அணி ஆடிய 6 போட்டிகளின் முடிவு கடைசி ஓவரில் தெரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

தோல்விக்கு பின் பேசியிருந்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் குர்ரான், “மீண்டும் அருகே வந்து முடிந்த போட்டி. ஆனால் அதில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து விட்டோம். இளம் வீரர் அசுதோஷ் மிக அபாரமாக ஆடியும் தோல்வியடைந்தது ஏமாற்றமாக உள்ளது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் இழந்து அவுட் ஆவதை விட நெருக்கமாக வந்து தோல்வி அடைவது கடினமாக உள்ளது. ஆனால் நாங்கள் முதலிலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம்.

அசுதோஷ் சர்மா மற்றும் சஷாங்க் சிங் போட்டியை அருகில் கொண்டு வந்தது மனம் நெகிழ வைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஸ்வீப் ஷாட்களை மிக தைரியமாக ஆடும் அசுதோஷ் ஷர்மாவிற்கு தன்னம்பிக்கை அதிகம் என்று நான் நினைக்கிறேன். போட்டியை தோற்றிருந்தாலும் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் அணியில் அமைந்துள்ளது. இனிவரும் போட்டிகளில் இதனை அப்படியே தலைகீழாக மாற்றி மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என சாம் குர்ரான் கூறியுள்ளார்.

சற்று முன்