- Advertisement 3-
Homeவிளையாட்டுசஞ்சு சாம்சனை வைத்து பிசிசிஐ ஆடும் ஆட்டம்.. கடைசி வரை ஒரு கோப்பை இல்ல.. கிண்ணம்...

சஞ்சு சாம்சனை வைத்து பிசிசிஐ ஆடும் ஆட்டம்.. கடைசி வரை ஒரு கோப்பை இல்ல.. கிண்ணம் கூட வாங்க இந்திய அணியால வாங்க முடியாது.. முடியலைடா சாமி..!

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து இரு நாட்கள் கூட முடிவடையாத சூழலில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கி டிச.3ஆம் தேதி வரையில் நடக்கவுள்ளது.

இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியின் அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின் ஆசிய போட்டிகள் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சாய் கிஷோர், ஷபாஸ் அஹ்மத் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் ஆசிய கோப்பை தொடரில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அதன்பின் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்ததால், உடனடியாக இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்பட்டார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.

- Advertisement 2-

அப்படியிருந்தும் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்டது ஏன் என்று இதுவரை விளக்கம் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாமல் இருந்ததால் மன உடைந்து விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது டி20 அணியிலும் சஞ்சு சாம்சன் உடனடியாக கழற்றிவிடப்பட்டுள்ளது அவரை வேண்டுமென்றே பிசிசிஐ பழிவாங்குவதாக ரசிகர்கள் மத்தியில் கருதி வருகின்றனர். இதனால் சஞ்சு சாம்சன் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எர்ழுப்பி வருகின்றன்ர்.

சற்று முன்