- Advertisement -
கிரிக்கெட்

எங்களோட வெற்றிக்கு காரணம்.. போராடி ஜெய்ச்சும் சாம்சன் சொன்ன அந்த வார்த்தை.. மனசை தொட்டுட்டாரு..

நடப்பு ஐபிஎல் சீசனில் எந்த அணிகளாலும் அசைத்து பார்க்க முடியாத அணியாக இருப்பதுடன் முதல் இடத்திலும் விளங்கி பட்டையை கிளப்பி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மிக சிறப்பாக வீரர்களை வழிநடத்தி வருவதால் எட்டு போட்டிகள் ஆடி முடித்திருந்த அவர்கள், 7 போட்டிகளில் வெற்றி கண்டிருந்தனர். மேலும் அந்த அணியில் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சந்தீப் ஷர்மா, சாஹல், ஹெட்மயர், போல்ட் என பல சிறந்த வீரர்கள் இருப்பதால் அவர்களை எதிர்த்து ஆடும் அணிகள் மிக கடினமாக போட்டி போட்டு தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை அவர்களின் சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொண்டிருந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ராகுல் 76 ரன்களை அதிரடியாக சேர்த்திருந்த நிலையில் அவருக்கு துணையாக நின்ற தீபக் ஹூடாவும் 50 ரன்கள் எடுத்திருந்தார். உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதால் ராகுல் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் ஆரம்பத்தில் அதிரடி காட்டியதற்கு மத்தியில், ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் விக்கெட்டையும் இழந்திருந்தனர். இதனையடுத்து முக்கியமான கட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜூரேல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இணைந்து ராஜஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் சென்றனர்.

19 வது ஓவரிலேயே இலக்கை ராஜஸ்தான் அணி எட்டிப் பிடிக்க, சாம்சன் மற்றும் ஜூரேல் என இருவரும் அரைசதம் கடந்து அசத்தி இருந்தனர். சென்னை அணியை இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வீழ்த்திய லக்னோ அணிக்கு நிச்சயம் இந்த தோல்வி நெருக்கடியை கொடுக்கலாம். அதே வேளையில், இத்துடன் 8 வெற்றிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்து விட்டதாக தெரிகிறது.

- Advertisement -

நான் கீப்பராக உள்ளதால் மிக அதிர்ஷ்டமானவனாக உணர்கிறேன். பவர் பிளே ஓவர்களில் ஒரு ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக தங்களின் கடமையை செய்திருந்தனர். இந்த போட்டிக்கு பின்னால் ஏராளமான திட்டமிடல்கள் இருந்தது. மேலும் இந்த போட்டியின் தொடக்கமும், முடிவும் நன்றாக இருந்தது. நடுவே சில ஓவர்கள் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை.

இந்த ஃபார்மட்டில் ஃபார்ம் என்பது ஒரு நிலையில்லாத விஷயம்தான். துருவ் ஜூரேல் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதை பார்த்திருந்தோம். அதனால் அவர் மீது அதிக நம்பிக்கையை வைத்திருந்தோம். வலைப் பயிற்சியில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை பயிற்சி செய்து வந்தார். நாங்கள் நன்றாக ஆடி வருவதுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் எங்கள் பக்கம் இருப்பதாக தெரிகிறது. மேலும் எங்கள் திட்டமிடல்களையும் சரியாக வகுக்க வேண்டும் என நினைக்கிறேன். மேலும் எங்கள் அணியின் மீட்டிங்கில் கூட செயல்பாடை தான் அதிகம் கவனித்து வருகிறோம்” என சஞ்சு சாம்சன் கூறினார்.

- Advertisement -

Recent Posts