- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதையா போய் மிஸ் பண்ணுவீங்க.. அமைதியா இருந்த கோலியை கடுப்பாக்கிய ஆர்சிபி வீரர்..

இதையா போய் மிஸ் பண்ணுவீங்க.. அமைதியா இருந்த கோலியை கடுப்பாக்கிய ஆர்சிபி வீரர்..

- Advertisement 1-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி நெருங்கியதும் ஏதோ ஐபிஎல் கோப்பை நெருங்கியது போல ஆக்ரோஷமாக ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்திலேயே அதனை கொண்டாடி தீர்த்திருந்தனர். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த முதல் எலிமினேட்டர் போட்டியில் ஒரு வீரர்கள் கூட வாய் திறக்காமல் அமைதியாக இருந்தது, அந்த அணியின் ரசிகர்களை மட்டும் இல்லாமல் அனைவரையுமே சற்று கலங்க தான் வைத்திருந்தது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை எடுக்க தொடர்ந்து சென்னை ஆட்டத்தை தொடங்கி இருந்தனர். அப்போது இரண்டாவது இன்னிங்ஸ் முழுக்க கோலி மற்றும் அனைத்து ஆர்சிபி வீரர்களும் ஆக்ரோஷமான செயல்பாட்டையும் காண்பித்திருந்தனர். அது மட்டுமில்லாமல், தேவையில்லாமல் நடுவரிடம் கோபப்படுவது, தேவையில்லாத விஷயங்களுக்கு முறையிடுவது என கோலியின் செயல்பாடுகள் மற்ற அணி ரசிகர்களுக்கு பிடித்து போகாமலும் இருந்தது.

ஆனால் இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றதால் பெரிய அளவில் இந்த விஷயங்கள் விமர்சனம் ஆகாத சூழலில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலக்கே குறைவாக இருந்ததால் கோலி உள்ளிட்ட யாருமே ஃபீல்டிங்கில் வாய் திறக்கவில்லை. மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்களே வாயடைத்து போயிருந்த நிலையில், கோலியும் கூட ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் இருந்து வந்தார்.

அப்படி ஒரு சூழலில் தான் அவரையே அதிர்ச்சி அடைய வைக்கும் சம்பவம் ஒன்று இந்த போட்டியில் அரங்கேறி இருந்தது. முதல் விக்கெட்டை ராஜஸ்தான் இழந்ததும் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். ஜெய்ஸ்வாலுடன் 2 ரன்கள் ஓட முற்பட்ட சாம்சன், பின்னர் மீண்டும் நான் ஸ்ட்ரைக்கர் எண்டு நோக்கி மிக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

- Advertisement 2-

அவர் கிரீசுக்குள் வருவதற்கு முன்பாகவே, ஸ்வப்னில் சிங் பந்தை கரண் ஷர்மாவிடம் வீசி விட்டார். அப்போது சாம்சனை ரன் அவுட் செய்ய பொன்னான வாய்ப்பு இருந்தும் மிக அசால்டாக அதனை தவற விட்டார் கரண் ஷர்மா. கிரீஸுக்கு வெளியே சாம்சன் இருந்த போது அருகே இருந்த ஸ்டம்பில் மிக எளிதாக அவரை அவுட் செய்திருக்கலாம்.

இதனை கரண் ஷர்மா தவற விட்டதும் பவுண்டரி லைன் அருகே நின்ற கோலி, ஏமாற்றத்தில் சைகை காட்டி இருந்தார். ஆனால், அதே வேளையில் 17 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சனை கரண் ஷர்மாவே அவுட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்