- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணி தொடரை வென்றதும்.. ஷாஹீன் அப்ரிடியை கலாய்க்கும் ரசிகர்கள்.. ஓஹோ, இப்டி ஒரு கனெக்ஷன்...

இந்திய அணி தொடரை வென்றதும்.. ஷாஹீன் அப்ரிடியை கலாய்க்கும் ரசிகர்கள்.. ஓஹோ, இப்டி ஒரு கனெக்ஷன் இருக்கா..

- Advertisement 1-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்றிருந்த சூழலில், இந்திய அணி இதனை 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. முன்னதாக, இதன் கடைசி டி 20 போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்றிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஒரு பக்கம் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தாலும் மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இதனால், அனைத்து ஓவர்களும் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் இருந்தது.

நடுவே ஆஸ்திரேலிய வீரர் பென் மேக்டோர்மெட் அதிரடியாக ஆடி சிக்ஸர்கள் அடித்து கொண்டிருக்க, அவர் அவுட்டானதும் இந்திய அணி மீண்டும் வெற்றி பாதையில் பயணித்தது. அப்படி இருக்கையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட், பவுண்டரிகளை பறக்க விட்டார். இறுதியில், இரண்டு ஓவர்கள்ளுக்கு 17 ரன்கள் வேண்டும் என்ற சூழலில், 19 வது ஓவரை வீசிய முகேஷ் குமார், 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தொடர்ந்து கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை அசத்தலாக வீசிய அர்ஷ்தீப் சிங், வேட் விக்கெட்டை வீழ்த்தியதுடன் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறவும் வழி செய்தார்.

தொடர்ந்து பேசி இருந்த அர்ஷ்தீப் சிங், இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் இனி வரும் தொடர்களில் அதிக பலத்துடன் திரும்பி வருவேன் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, அர்ஷ்தீப் சிங் மூலம் இந்திய அணி வெற்றி பெற்ற சூழலில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement 2-

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டி 20 கோப்பையின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி இருந்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசி இருந்தார். இந்த ஓவரை எதிர்கொண்ட மேத்யூ வேட், 3 சிக்ஸர்களுடன் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தார்.

உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஷாஹீன் அப்ரிடியை எதிர்கொண்ட அதே வேட், அர்ஷ்தீப் சிங் ஓவரில் 10 ரன்கள் கூட அடிக்க முடியாமல் அவுட்டாகினார். இதனை குறிப்பிட்டு தான் ஷாஹீன் அப்ரிடியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மறுபக்கம், ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் கூட ‘இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக முடியாது வேட்’ என ஷாஹீன் அப்ரிடியை குறிப்பிட்டு ஜாலியாக ட்வீட் செய்திருந்தது.

சற்று முன்