- Advertisement 3-
Homeவிளையாட்டுபாக் வீரரின் அந்த 2 சிக்ஸ்... அந்த அதிரடிய மறக்க முடியுமா... ரசிகரின் கிண்டலுக்கு அஸ்வின்...

பாக் வீரரின் அந்த 2 சிக்ஸ்… அந்த அதிரடிய மறக்க முடியுமா… ரசிகரின் கிண்டலுக்கு அஸ்வின் கொடுத்த தரமான பதில்

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல் இந்திய ஆடுகளங்களில் பயிற்சி போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் மழை காரணமாக அந்தப் பயிற்சி போட்டி கைவிடப்பட்டது. அந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை, தினேஷ் கார்த்தி பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில், இதுதான் எனதுப் கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபனாகவே அறிவித்தார்.

இந்தப் பேட்டிக்கு பின் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினை பேட்டி எடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்ததாக கருத்து பதிவிட்டார். அதற்கு அஸ்வின் தரப்பில், நீங்கள் காத்திருந்தது பற்றி எனக்கு தெரியாது. அதனை பற்றி நான் சிந்திக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தார். இப்படி நண்பர்கள் ஜாலியாக உரையாடியது ட்விட்டரில் ட்ரெண்டாகியது.

ஆனால் அந்த பதிவுக்கு கீழ் பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர், உங்களின் பந்தில் ஷாகித் அப்ரிடி அடித்த 2 சிக்சர்களை இன்னும் மறக்க முடியவில்லை என்று கிண்டல் செய்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் ஷாகித் அப்ரிடி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். அதனை தான் அந்த ரசிகர் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement 2-

சர்வதேச வீரர்களை எதிரணி ரசிகர்கள் இவ்வாறு கிண்டல் செய்வது சகஜம் தான். அதனை பெரும்பாலான வீரர்கள் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிடுவர்கள். ஆனால் அஸ்வின் தனது ஸ்டைலில், ஷாகின் அப்ரிடி அடித்த அந்த 2 சிக்சர்களும் மிகச்சிறந்த ஷாட்கள். எப்போதும் அவரின் அதிரடி ஆட்டம் பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

கிண்டல் செய்த ரசிகர்களிடம் கோபத்தை காட்டாமல் மிகவும் ஜாலியாகாவும், அப்ரிடியையும் பாராட்டி அஸ்வின் அளித்த பின்னூட்டம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அஸ்வினின் அறிவுக்கூர்மையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்