- Advertisement -
Homeகிரிக்கெட்ஷாஹீன் அப்ரிடியை எனது மருமகனாக ஏற்க இதுதான் காரணம். ஷாஹித் அப்ரிடி கொடுத்த விளக்கம்

ஷாஹீன் அப்ரிடியை எனது மருமகனாக ஏற்க இதுதான் காரணம். ஷாஹித் அப்ரிடி கொடுத்த விளக்கம்

-Advertisement-

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான அணிக்காக பல நூறு போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர். தற்போது 46 வயதாகும் ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் விளையாடிய அனுபவம் உடையவர். அதோடு இன்றளவும் தொடர்ச்சியாக டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஷாஹித் அப்ரிடியின் மூத்த மகளான அன்ஷா அப்ரிடியை தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அப்ரிடிக்கு அண்மையில் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்.

ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் அன்ஷா அப்ரிடி ஆகியோரது திருமணம் கராச்சியில் கோலாலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான், வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப், சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் என பல்வேறு சக வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஷாஹித் அப்ரிடி ஏன் ஷாகின் ஷா அப்ரிடிக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் என்பது குறித்த காரணத்தை தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷாஹீன் அப்ரிடியின் குடும்பத்தை எனக்கு அவ்வளவு பர்சனலாக தெரியாது. ஆனால் நீண்ட காலமாகவே அவர்களது குடும்பத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் ஒரு உறவு இருந்து வந்தது.

-Advertisement-

நீண்ட காலமாகவே அவர்களுடைய குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்த எங்களது உறவினர் ஒருவர் அவர்களது குடும்பத்தை பற்றி எடுத்து கூறினார். அதோடு எனக்கும் ஷாஹின் ஷா அப்ரிடியை தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் விளையாடும் போது தெரியும். அவர் ஒரு நல்ல மனிதராக அவரது குணங்கள் என்னை ஈர்த்தன. நான் அவருடன் இணைந்து விளையாடும் போது அவருடைய பண்பு மற்றும் ஒழுக்கம் என அனைத்தையும் நேரில் பார்த்தேன்.

எங்கு அவர் பயணித்து விளையாடினாலும் அங்கு அவர் ஒரு நல்ல மனிதராக அனைவரது மத்தியிலும் பெயர் எடுத்தார். அவரிடம் உள்ள நல்ல குணங்கள் காரணமாகவே அவரை எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் என ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஷாஹீன் அப்ரிடி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்