- Advertisement 3-
Homeவிளையாட்டுஷூ வாங்கவே பணமில்ல.. ஒரு அண்ணன் மாதிரி உதவி பண்ணாரு.. கலங்கிய சிஎஸ்கே வீரர் ஷர்துல்..

ஷூ வாங்கவே பணமில்ல.. ஒரு அண்ணன் மாதிரி உதவி பண்ணாரு.. கலங்கிய சிஎஸ்கே வீரர் ஷர்துல்..

- Advertisement 1-

இந்தியாவில் புகழ் வாய்ந்த ரஞ்சித் தொடரின் இறுதி போட்டியில் தற்போது மும்பை மற்றும் விதர்பா ஆகிய அணிகள் மோதி வருகிறது. இதுவரை அதிக முறை ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றி உள்ள மும்பை அணி இந்த முறையும் அதனை வென்று சாதிப்பதற்கான முனைப்பில் உள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மும்பை அணி, 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்து இருந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய மும்பை 418 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் விதர்பா அணியின் வெற்றிக்காக 528 ரன்கள் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை விதர்பா எடுத்திருந்தாலும் அவர்களின் வெற்றி வாய்ப்பு சற்று கடினமான ஒன்று தான் என்றே தோன்றுகிறது.

இப்படி ஒரு இலக்கை தொடுவது நிச்சயம் சாத்தியமே இல்லாத விஷயம் என்பதால் மும்பையே மீண்டும் ஒரு முறை ரஞ்சித் தொடர் கோப்பையை கைப்பற்றும் நிலையும் உள்ளது. இதற்கு மத்தியில் இந்திய அணி வீரரான தவால் குல்கர்னி, மும்பை அணிக்காக தற்போது ஆடி வரும் நிலையில், இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவரது முடிவு பற்றி மும்பை அணியின் கேப்டன் ரஹானே உள்ளிட்ட பலரும் கூட நெகிழ்ச்சியான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர். இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் ஆடியுள்ள தவால் குல்கர்னி, ஐபிஎல் மற்றும் ரஞ்சி தொடர் உள்ளிட்டவற்றில் சிறப்பான பந்து வீச்சாளராக செயல்பட்டுள்ளார்.

- Advertisement 2-

அப்படி இருக்கையில், அவருடன் மும்பை அணியில் ஆடி வரும் ஷர்துல் தாக்கூர் சில முக்கியமான விஷயங்களை கலங்கி போய் குறிப்பிட்டுள்ளார். மும்பை அணி, தமிழ்நாடு அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஷர்துல் தாக்கூர், இறுதி போட்டியிலும் முதல் இன்னிங்சில் 75 ரன்களை அதிரடியாக சேர்த்திருந்தார்.

இதனிடையே சக வீரரான தவால் குல்கர்னி குறித்து ஷர்துல் தாக்கூர் பேசுகையில், “எனக்கும் குல்கர்னிக்கும் இந்த தருணம் மிகவும் எமோஷனலான ஒன்றாகும். நான் என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே அவரை பார்த்து வருகிறேன். என்னுடைய பந்து வீச்சில் அவர் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளார். என்னிடம் ஷூ வாங்கக்கூட பணம் இல்லாத சமயத்தில் எனக்காக பணம் தந்து புதிய ஷூக்களை வாங்கி தந்தவர் குல்கர்னி” என மிகவும் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் ஷர்துல் தாக்கூர்.

சற்று முன்