- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த இரண்டு பேர் மட்டும் இல்லனா.. நாங்க செஞ்ச பெரிய தப்பு இதான்.. தோல்வியால் மனமுடைந்த...

அந்த இரண்டு பேர் மட்டும் இல்லனா.. நாங்க செஞ்ச பெரிய தப்பு இதான்.. தோல்வியால் மனமுடைந்த ஷிகர் தவான்..

- Advertisement 1-

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த போட்டியில் ஹைதராபாத் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 64 ரன்கள் எடுப்பதற்குள்ளே நான்கு முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. அப்படி ஒரு சூழலில் இளம் வீரரான நிதிஷ் ரெட்டி, மிகச் சிறப்பாக ஆடி ஹைதராபாத் அணியை மீட்டெடுத்து இருந்தார்.

மிக நெருக்கடியான சூழலிலும் ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்களை விரட்டிய அவர், 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் நாலு ஃபோர்களும் ஐந்து சிக்ஸர்களும் அடக்கம். இறுதி கட்டத்தில் அப்துல் சமாத் அதிரடி காட்ட ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் 20 ரன்களுக்குள் ப்ரப்சிமரன்சிங், பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் விக்கெட் இழந்து தடுமாற அடுத்து வந்த சாம் குர்ரானும், சிக்கந்தர் ராசாவும் சிறிய பங்களிப்பை அளித்துவிட்டு அவுட்டாகினர். அப்படி ஒரு சூழலில் கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

குஜராத் அணிக்கு எதிராக அதிரடி காட்டி வெற்றி பெற வைத்த ஸஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா களத்தில் இருக்க போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருந்தது. இதில் நடராஜன் வீசிய 19 வது ஓவரில் பத்து ரன்கள் சேர்க்கப்பட கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் வீசிய இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளிலேயே இரண்டு சிக்ஸர்களுடன் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. மூன்று பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட, ஒரு சிக்சருடன் 10 ரன்கள் தான் சேர்க்கப்பட்டது. இதனால், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்திருந்தது ஹைதராபாத் அணி.

- Advertisement 2-

தோல்விக்கு பின் பேசியிருந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான், “ஸஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். நாங்கள் ஹைதராபாத் அணியை மிகச் சிறந்த ரன்னில் கட்டுப்படுத்தி இருந்தோம். ஆனால் பேட்டிங்கில் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் கடைசியில் அது எங்களுக்கு மிகப்பெரிய விலையாக மாறிவிட்டது. கடைசி பந்தில் நாங்கள் ஒரு கேட்ச்சை மிஸ் செய்தோம்.

அதுபோல இன்னும் ஒரு பத்து, பதினைந்து ரன்களில் அவரை குறைத்து கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கிலும் நாங்கள் தவறு செய்து விட்டோம். ஸஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் ஆகிய இளம் வீரர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்கவே அருமையாக உள்ளது. அவர்கள் போட்டியை முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. நாங்களும் மிக நெருக்கமாக வந்து விட்டோம். அது தான் இனிவரும் போட்டிகளில் எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்று தெரிகிறது. ஆனால் நாங்கள் இன்னும் சிறந்த ஆட்டத்தை வரும் போட்டிகளில் வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்” என தவான் கூறியுள்ளார்.

சற்று முன்