- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த பையனை மறந்துட்டீங்க.. நெறியாளர் கேட்காமலேயே ஷிகர் தவான் சொன்ன விஷயம்.. நெகிழ்ந்த ரசிகர்கள்..

அந்த பையனை மறந்துட்டீங்க.. நெறியாளர் கேட்காமலேயே ஷிகர் தவான் சொன்ன விஷயம்.. நெகிழ்ந்த ரசிகர்கள்..

- Advertisement 1-

அனைத்து ஐபிஎல் தொடரிலும் முதல் போட்டியை வெற்றிகரமாக தொடங்கும் பஞ்சாப் அணியினால் அதனை தொடர் முழுக்க தொடர முடியாமல் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேற முடியாமல் தவித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. நடப்பு சீசனில் ஷிகர் தவானின் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவானுடன் ஜித்தேஷ் சர்மா, சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ரபாடா, பேர்ஸ்டோ என பல நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும் ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்வதால் அவர்களால் தொடர்ந்து வெற்றிகளையும் குவிக்க முடியாமல் இருந்து வருகின்றன.

குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகள் ஆடி இருந்த பஞ்சாப் அணி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. மேலும் அந்த அணியின் கேப்டனாக இருக்கும் தவானின் பவுலிங் ரொட்டேஷனில் நிறைய தவறுகள் செய்வதாகவும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடி இருந்த பஞ்சாப் அணி முதல் பத்து ஓவர்களை சிறப்பாக பந்து வீசி இருந்த போதிலும் அதனை அடுத்த பத்து ஓவர்களில் தொடரவும் தவறி விட்டனர். இதனால் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய குஜராத் அணி இருபது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த தொடரில் ஒரு நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது.

இதன் பின்னர் இலக்கை நோக்கி பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாப் அணியில் டாப் ஆர்டர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் தோல்வி உறுதி என்றே தான் நினைத்திருந்தனர். 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் அவர்களின் வெற்றி வாய்ப்பும் கடினமாக தான் இருந்தது. ஆனால் எங்கிருந்தோ வந்தது போலவே யாரும் எதிர்பாரத நேரத்தில் உள்ளே வந்த சஷாங்க் சிங், வாடி போன பஞ்சாப் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தார்.

- Advertisement 2-

அவருடன் இணைந்து கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அசுதோஷ் சர்மா, 17 பந்துகளில் 31 ரன் எடுர்த்து அவுட்டாக, கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் வெற்றி இலக்கை எட்ட வைத்தார் ஷசாங்க் சிங். 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த இவர் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

இந்த வெற்றிக்கு பின் உற்சாகமான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், “இது ஒரு அற்புதமான போட்டி. மிகவும் நெருக்கமான போட்டியும் கூட. அணியின் இளம் வீரர்கள் பணியை சிறப்பாக செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல ஒரு தொடக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் எங்களின் திட்டமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நான் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனேன்.

அப்படி இருந்தும் பவர்ப்ளே முடிவில், 60 ரன்களை நாங்கள் எடுத்திருந்தோம். நாங்கள் பார்ட்னர்ஷிப்பையும் கட்டமைத்து வந்த சமயத்தில் தான் ஷசாங்க் சிங், சிறப்பாக ஆடி போட்டியை மாற்றினார். அவர் சிக்ஸர் அடித்த விதமும் அற்புதமாக இருந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு ஐபிஎல் ஆடியும் நன்றாக ஆடி இருந்தார். நான் அசுதோஷ் ஷர்மாவை பற்றி பேசியே ஆக வேண்டும். நெருக்கடிக்கு உள்ளான நேரத்தில் உள்ளே வந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்” என நெறியாளர் கேட்காமலேயே இளம் வீரர் அசுதோஷ் பற்றி ஷிகர் தவான் பேசியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

சற்று முன்