- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக், ரோஹித் கோட்டை விட்டதை எட்டிப் பிடிப்பாரா ஷ்ரேயஸ்.. சேப்பாக்கத்தில் நடக்கப் போகும் அற்புதம்?..

ஹர்திக், ரோஹித் கோட்டை விட்டதை எட்டிப் பிடிப்பாரா ஷ்ரேயஸ்.. சேப்பாக்கத்தில் நடக்கப் போகும் அற்புதம்?..

- Advertisement 1-

தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியா அல்லது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியா என்பது பற்றி தான் பெரிய விவாதங்கள் இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் இதற்கு முன்பு ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா என இரு அணிகளுமே இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது.

இதனால், 3 வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற போவது யார் என்பதிலும் மிகுந்த விறுவிறுப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் போட்டிகள் அடிப்படையில் பலமாக விளங்கும் அணிகள் பற்றியும், அதனை பொறுத்து எந்த அணிகள் கோப்பையை கைப்பற்றும் என்பது பற்றிய கணிப்புகளும் இருந்து வருகிறது. இந்த சீசனில் ஆடும் 11 வீரர்களும் கொல்கத்தா அணியில் அசைத்து பார்க்க முடியாத சூழலில், அதனையே இறுதி போட்டியில் செயல்படுத்தினால் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்த சீஸனின் இன்னொரு சிறப்பம்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங் வரிசை இருந்து வருகிறது. 250 ரன்களை அசால்டாக அடித்து பட்டையை கிளப்பி வரும் ஹைதராபாத் அணி, கடந்த சில போட்டிகளில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இதனால், அவை அனைத்தையும் சரி செய்து இறுதி போட்டியில் களமிறங்கும் என தெரிகிறது. மேலும் புவனேஷ்வர் குமார், நடராஜன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் கலக்கும் பட்சத்தில், கொல்கத்தா அணிக்கும் நெருக்கடி உருவாகும் என்றும் தெரிகிறது.

- Advertisement 2-

அப்படி இருக்கையில், மிக வித்தியாசமான ஒரு கணிப்பின் அடிப்படையில் ரசிகர்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தங்களின் ஆட்டத் திறனை பல மடங்கு அதிகமாக வெளிப்படுத்தும் பட்சத்தில் தான் கோப்பையை வெல்லும் அணிகளாக அவர்களால் மாற முடியும்.

ஆனால், இதனைத் தாண்டி சில வினோதமான விஷயங்களின் அடிப்படையில் இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் வைரலாக்கவும் செய்வார்கள். அந்த வகையில், இறுதி போட்டிக்கு முன்பாக இரு அணிகளின் கேப்டன்களும் புகைப்படத்திற்கு கோப்பையுடன் போஸ் கொடுப்பார்கள். இதில், கடந்த பல முக்கியமான தொடர்களில் புகைப்படத்தின் வலது பக்கம் நின்ற கேப்டன்கள் தான் வெற்றி பெற்று வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை, 2023 ஐபிஎல் ஃபைனல், மகளிர் பிரீமியர் லீக்கின் இரண்டு இறுதி போட்டிகள், U 19 இறுதி போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல முக்கியமான தொடர்களில் வலது பக்கம் நின்றவர்களே வெற்றி பெற்றுள்ளனர். அப்படி இந்த முறை, ஐபிஎல் இறுதி போட்டிக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் வலது பக்கம் இருக்கிறார்.

இதனால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என பலரும் தெரிவித்து வந்தாலும், இப்படி இடது பக்கம் நின்று கோப்பையை தவற விட்ட ரோஹித், ஹர்திக்கை தாண்டி இந்த கணிப்புக்கு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

சற்று முன்