- Advertisement -
Homeகிரிக்கெட்பெரிய தப்பு பண்ணிட்டோம்.. அடுத்த மேட்ச்ல அப்படி நடந்துடவே கூடாது.. சோகத்தில் கில்..

பெரிய தப்பு பண்ணிட்டோம்.. அடுத்த மேட்ச்ல அப்படி நடந்துடவே கூடாது.. சோகத்தில் கில்..

-Advertisement-

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இரண்டு சீசன்கள் இதற்கு முன்பாக ஆடியிருந்த சூழலில் அதன் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்ல அவரிடம் இருந்த கேப்டன் பதவி கில்லுக்கு கொடுக்கப்பட்டது. அதே அணியை இந்த சீசனின் ஆரம்பத்தில் மிக சிறப்பாக வழி நடத்தி வந்த கில், கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து தடுமாற்றத்தை ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் கண்டு வருகிறார்.

பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தான் அவரால் இந்த தடுமாற்றம் ஏற்படுகிறது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதனை மெய்யாக்கும் விதத்தில் பெங்களூருக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் பல விஷயங்கள் அமைந்திருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 19. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்களும், ராகுல் தெவாட்டியா 35 ரன்களும், டேவிட் மில்லர் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.

அதிரடி பேட்டிங் நிறைந்த பெங்களூரு அணியால் நிச்சயம் எளிதாக இந்த ஸ்கோரை எட்டிப் பிடித்துவிட முடியும் என்ற சூழலில் தான் சில எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி இருந்தது. ஆறு ஓவர்கள் முடிவதற்குள் 90 ரன்களை கடந்த ஆர்சிபி, 24 ரன்களை சேர்ப்பதற்குள் திடீரென 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 116 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, கடைசியில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி 14 வது ஓவரில் ஆர்சிபியின் வெற்றியையும் உறுதி செய்தார்.

அதனால் குஜராத் அணியின் தோல்வியும் உறுதியாக, 11 போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். இரண்டு முறை பிளே ஆப் முன்னேறிய குஜராத் அணி, இந்த முறை தடுமாறி வருவதால் அவர்களின் அடுத்த சுற்று வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

-Advertisement-

இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த குஜராத் அணியின் கேப்டன் கில், “ஒரு போட்டியில் நீங்கள் எதிரணிக்கு நிர்ணயிக்கும் இலக்கு என்பது பிட்ச்சை பொறுத்துதான் அமையும். முதல் சில ஓவரில் உங்களுக்கு கிடைக்கும் ஆலோசனைப்படி நீங்கள் ஆடி ரன் சேர்க்கவும் செய்வீர்கள். 170 முதல் 180 ரன்கள் இந்த பிட்ச்சில் நல்ல டோட்டலாக இருந்திருக்கும்.

பவர்பிளேவில் எங்களுடைய பேட்டிங்கும், பவர் பிளேவில் எங்களுடைய பந்துவீச்சும் தான் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருந்தது. முதலிலேயே விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் இன்னொரு பவுலரை அணியில் பயன்படுத்தி இருக்கலாம். இதனால் அடுத்த போட்டியில் ஜீரோவில் இருந்து தொடங்கி இந்த போட்டியில் இருந்து கடந்து செல்ல விரும்புகிறோம்.

இதில் இருந்து சில பாசிட்டிவான விஷயங்களையும் எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. அதேபோல இதில் செய்து தவறுகளை திருப்பி செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இனிவரும் அனைத்து போட்டியிலும் இங்கிருந்து வெல்ல வேண்டும் என்பதுதான் இலக்கு” என கில் கூறினார்.

-Advertisement-

சற்று முன்