- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி சிக்ஸ் அடிச்சா பெரிய ஆளா.. அவரு பாத்த வேலை இருக்கே.. கடிந்து கொட்டிய முன்னாள்...

தோனி சிக்ஸ் அடிச்சா பெரிய ஆளா.. அவரு பாத்த வேலை இருக்கே.. கடிந்து கொட்டிய முன்னாள் வீரர்..

- Advertisement 1-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மைதானத்தில் எந்த அணியை எதிர்த்து ஆடினாலும் அங்கே கூடும் ரசிகர்கள் தோனிக்காக மட்டும் தான் தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருவது வாடிக்கையான நிகழ்வாக கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இருந்து வருகிறது. பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் ஈடுபடும் தோனி கடந்த சீசனில் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் அவர் ஒரு சிக்சர் அடித்தாலே அதனை ஏதோ போட்டி வென்றது போலவும் ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

அப்படி ஒரு சூழலில் இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக, முதல் இரண்டு போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போது அதில் அவருக்கு பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் டெல்லியின் ஹோம் மைதானம் என்ற ஒரு சூழலில் கூட சிஎஸ்கே ரசிகர்களால் தான் மைதானம் நிரம்பி வழிந்தபடி இருந்தன.

இரண்டு போட்டிகளில் தோனியின் பேட்டிங்கை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு இந்த முறை எப்படியாவது அவர் ஆட வேண்டும் என்ற ஏக்கம் உருவாக, அதனை நிஜமாக்கவும் செய்தார் தோனி. டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கி சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை பறக்க விட்டிருந்தார். ஆனாலும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த போதும் கூட மைதானம் முழுக்க சிஎஸ்கே வெற்றி பெற்றது போன்ற ஒரு கொண்டாட்டத்தை தான் பார்க்க முடிந்தது.

தோனி ஒரு பந்து பேட்டிங் செய்தாலும் கூட அதை ஒரு திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழலில், டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளார் சைமன் டால். நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான இவர் தற்போது வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் தோனி பற்றி பேசிய சைமன் டால், “தோனியின் பேட்டிங் பற்றி மிகப்பெரிய ஒரு உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருவது உண்மை தான். ஆனால் இந்த போட்டியில் முதலில் நிறைய டாட் பந்துகளை அவர் எதிர்கொண்டு இருந்தார். அதற்கு பின்னர் அவர் பவுண்டரிகள் எடுத்ததை என்னால் நம்பவே முடியவில்லை.

அவர் மிகச் சிறந்த தோனி என்பது சரி தான். ஆனாலும் ரன் எடுக்காமல் இருந்து பெரிய தவறு செய்து விட்டார். அந்த ரன்களை எடுக்காமல் போனது சிஎஸ்கே அணிக்கு தோல்வியின் காரணமாக இது அமைந்திருக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் தோனியின் கால் பகுதியில் காயத்துடன் இருந்ததால் தான் அவரால் சிங்கிள் ஓட முடியாமல் போனதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்